[X] Close

ஜமால் கொலை விவகாரம்: சவுதிக்கு எதிராக மீண்டும் வீடியோ வெளியிட்ட துருக்கி


jamal-death-video

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 17:37 pm
  • அ+ அ-

கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியின் உடல் பாகங்களை  3 பேர் எடுத்துச் செல்லும் வீடியோவை  துருக்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்தான செய்தியை துருக்கியின் ஹபர் தொலைக் காட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், ”இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அதிகாரியின் இல்லத்துக்கு ஜமாலின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை 3 நபர்கள் பெரிய பை ஒன்றில் எடுத்துச் செல்கிறார்கள். இந்த இல்லம் சவுதி தூதரகத்திற்கு அருகில்தான் அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான்  சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.

முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக் கொண்டது. ஆனால் இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close