[X] Close

தண்ணீர் கொடுக்காமல் 5 வயது சிறுமியை கொன்ற ஐஎஸ் பெண் தீவிரவாதி


is-girl-terrorist-killed-a-five-year-old-girl

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 12:01 pm
  • அ+ அ-

ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட ஐஎஸ் பெண் தீவிரவாதி ஒருவர்  5 வயது சிறுமிக்கு தண்ணீர் கொடுக்கமல் சித்தரவதை செய்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்தவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இருந்தவருமான  ஜெனிபர் என்ற பெண்ணும் அவரது கணவரும்  இராக்கில் 2015 ஆம் ஆண்டு இருந்தப்போது  ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த மொசூல் நகரிலிருந்து 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கொத்தடிமையாக  ஜெர்மனிக்கு அழைந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமி மரணமடைந்திருக்கிறார். பின்னர் அந்த சிறுமியின் மரணம் தொடர்பாக போர்க் குற்ற விசாரணை ஜெனிபர் மீது ஜெர்மனியில் நடந்துள்ளது. இதில் அவர் அந்த சிறுமியை சித்ரவதை செய்து கொலைச் செய்துள்ளதாக ஜெர்மன் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, ”அச்சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் படுக்கையிலேயே சிறு நீர் கழிந்துள்ளார். இதனைக் கண்ட ஜெனிஃபரின் கணவர்அந்த சிறுமியை வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்துள்ளார்.

தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு தண்ணீர் வழங்காமல் கணவனும் மனைவியும் இருந்துள்ளனர். இதில் அந்தச் சிறுமி இறந்துள்ளார். ஜெனிபர் 2014 ஆம் ஆண்டு இராக் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். பின்னர் ஐஎஸ் அமைப்புக்காக சில பணிகளையும் செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

ஜெனிபர் மீதான குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழக்கப்படும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close