[X] Close

தொடர்ந்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவுக்கு மீண்டும் சுனாமி ஆபத்து- நிபுணர்கள் எச்சரிக்கை


indonesia-tsunami

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 21:54 pm
  • அ+ அ-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமான  அனாக் கிராக்கதோவ் எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அதன்  லாவா குழம்பு ஆபத்தான உயரத்தை அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,  ”இந்தோனேசியாவில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை  கடலடி  அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்து அதன் லாவா குழம்பு கடல் நீருடன் கலந்ததில் வெளிப்பட்ட ஆற்றலில் சுனாமி ராட்சத அலைகள் தாக்கியது.இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் அந்த எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அதன்  லாவா குழம்புகள் அதிகப்பட்ச உயரத்தை அடைந்துள்ளதாகவும்  இதன் காரணமாக  மீண்டும் மற்றுமொரு சுனாமி தாக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு  அந்த எரிமலையை  ஒட்டிய மூன்று கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய எச்சரிக்கை குறித்து இந்தோனேசிய புவியியல் துறை அதிகாரி கூறும்போது,  ”கடலுக்கு அடியிலும், கடலுக்கு மேலும் நிலச்சரிவுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது. மோசமான கால நிலை காரணமாக எங்களால் களத்துக்கு செல்ல முடியவில்லை. நாங்கள் செயற்கை கோள் படங்களை வைத்தும், அனாக் கிராக்கதோவ் எரிமலையினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை வைத்துத்தான் இதனை கூறுகிறோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close