[X] Close

திருடிய காருக்குள் சிக்கிக் கொண்ட சிறுவன்!- போலீஸை உதவிக்கு கூப்பிட்ட காமெடி


teen-calls-police-for-help-after-getting-locked-inside-car-he-was-trying-to-steal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Dec, 2018 15:39 pm
  • அ+ அ-

அண்மையில்தான் சென்னை ஐஸ்ஹவுஸில் பைக் திருட வந்தவர்கள் கண்காணிப்பு கேமராவை வானத்தை நோக்கி திருப்பிவைத்துவிட்டு திருடிய சம்பவம் நகைப்புச் செய்தியாக வெளியானது.

அதே பாணியில் நார்வே நாட்டிலும் ஒரு திருட்டு முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

நார்வேயின் ட்ராண்டெலாக் எனும் பகுதியிலிருந்து 17 வயது சிறுவன் ஒருவர் காரை திருட முயன்றார். கார் கதவை கள்ளத்தனமாக திறந்து உள்ளே நுழைந்துவிட்டார். ஆனால், அவரால் மீண்டும் கதவைத் திறக்க இயலவில்லை. வேறு வழியின்றி போலீஸூக்கு ஃபோன் செய்ய அவர்கள் வந்து காரிலிருந்து சிறுவனை மீட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸார் ட்விட்டர் பக்கத்தில், "காலை 8 மணியளவில் எங்களுக்கு ஃபோன் வந்தது. சிறுவன் ஒருவர் அழைத்திருந்தார். காருக்குள் நான் சிக்கிக் கொண்டேன் என்றார். காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை காப்பாற்றுங்கள் என்றார். காரை திருட முயன்றபோது இது நடந்ததாகவும் சொன்னார். நண்பரைப் போல் கருதி எங்களிடம் உதவி கோரினார். நாங்கள் அங்கு சென்று காரிலிருந்து அவரை விடுவித்தபோதுதான் அவர் நிம்மதியடைந்தார்" என ட்வீட் செய்துள்ளது.

அந்த சிறுவனை விசாரித்த போலீஸார் பின்னர் அவரை அவரது குடும்பத்தினரிடமே ஒப்படைத்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close