[X] Close

இசை நிகழ்ச்சியின்போது பாய்ந்த சுனாமி!- பதறவைக்கும் வீடியோ வைரலானது


indonesia-tsunami-rips-through-stage-as-band-performs-caught-on-camera

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Dec, 2018 16:33 pm
  • அ+ அ-

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா, ஜாவா தீவுப்பகுதியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கிய இசைக் குழுவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியப் பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை நேற்று இரவு 9 மணிக்கு (உள்ளூர்நேரப்படி) வெடித்துச் சிதறி, எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஜாவா கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த குழு ஒன்று சுனாமியில் சிக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.

செவன்டீன் என்ற அந்த இசைக்குழு டிசம்பர் 21 முதல் 23 வரை ஜாவா கடற்கரையோரம் இசை நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்திருந்தது.
அதன்படி பேண்ட் இசைக் கலைஞர்கள் உற்சாகமாக இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்க மேடையை பதம் பார்த்து உள்ளே பாயும் சுனாமி அலை ஒரே நிமிடத்தில் எல்லோரையும் புரட்டிப் போடுகிறது. சில மணித்துளிகள்தான் இந்த வீடியோ ஓடுகிறது. ஆனால், அதுவரை கரம் தட்டி இசையை ரசித்துக் கொண்டிருந்த அத்தனை உயிர்களும் அலையில் சிக்கிய காட்சி காண்போரை பதற வைக்கிறது.

இந்நிலையில் அந்த வீடியோ குறித்து செவன்டீன் இசைக்குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த குழுவின் முன்னணி பாடகர் ரெய்ஃபியான் ஃபாஜர்சியா, "எனது மனைவி டிலான், இன்னும் இரண்டு இசைக் கலைஞர்களைக் காணவில்லை. பேஸ் கிட்டாரிஸ்ட் பானி, எங்களது மேலாளர் ஒகி ஆகியோர் இந்த அசம்பாவிதத்தில் இறந்துவிட்டனர்.

மற்ற கலைஞர்கள் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். எனது மனைவியின் நிலை என்னவானது என்று எனக்குத் தெரியவில்லை. எனது மனைவியும் காணாமல் போன குழுவினரும் விரைவில் நல்லபடியாக திரும்ப வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close