[X] Close

சிறுபான்மையினரை எப்படி நடத்துவது?!- மோடிக்கு சொல்லித்தருவதாக சொல்லும் இம்ரான் கான்


will-show-modi-government-how-to-treat-minorities-says-imran-khan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Dec, 2018 16:05 pm
  • அ+ அ-

சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கு தான் எடுத்துரைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.

அண்மையில் பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா வெளியிட்ட வீடியோ ஒன்று பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பிவரும் நிலையில் இம்ரானின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக அந்த வீடியோவில், நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பதாக இந்தி நடிகர் நசிருதீன் ஷா விமர்சனம் செய்தார். யார் பெயரையும் குறிப்பிடாத அவர் தனது கருத்தை யுடியூப்பில் பதிவேற்றம் செய்தார். 
அதில் "எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது. இதுபோன்ற சூழல் மாற்றம் நிகழ்வது தெரியாதது எனக்கு மேலும் கவலை அளிக்கிறது" என நசிருதீன் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆட்சியின் கீழ் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொண்டார்.

அப்போது பேசுகையில், "பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் பார்வைக்கு ஏற்ப நாட்டில் சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்குவதில் எனது அரசு அக்கறை காட்டுகிறது. அந்தவகையில் தேவைப்பட்டால், சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்தியாவுக்கு நாம் செயல் விளக்கமாகக் காட்டுவோம். இந்தியாவில் சிலர் தாங்கள் சமமாக நடத்தப்படவில்லை எனக் கூறுகின்றனர்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close