[X] Close

பாஜக எனக்கு சீட் கொடுக்குமா எனக் கேட்காதீங்க, நான் ஏற்பேனா எனக் கேளுங்கள்:  எம்பி. சத்ருகன் சின்ஹா விளாசல்


shatrughan-sinha-keeps-all-sides-guessing-attacks-bjp-leadership

பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா

  • போத்திராஜ்
  • Posted: 23 Dec, 2018 12:40 pm
  • அ+ அ-

பாட்னா, பிடிஐ

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக எனக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுப்பார்களா என்று கேட்காதீர்கள், அவர்கள் கொடுக்கும் வாய்ப்பை நான் ஏற்பேனா இல்லையா என்பதுதான் முக்கியம் என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா காட்டமாகப் பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும், நட்சத்திர பிரச்சாரகாரராகவும் நடிகர் சத்ருஹன் சின்ஹா இருந்தார்.

ஆனால், கடந்த 20-14-ம்ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் எம்.பி. சத்ருகன் சின்ஹா.

இந்நிலையில், சிறைத் தண்டனை பெற்று உடல்நலக் குறைவில்லாமல் பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று சத்ருகன் சின்ஹா சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன்பின் அவர் பிடிஐ நிருபருக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.

 

அப்போது அவரிடம் மத்திய அரசுக்கு விமர்சித்து வரும் உங்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பாஜக மேலிடம் வழங்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ பாஜக எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமா என்று கேட்காதீர்கள். அந்த வாய்ப்பை நான் ஏற்றுக்கொள்வேனா அல்லது மறுப்பேனா என்று கேளுங்கள்.

பாட்னாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் லாலு பிரசாத்தை சந்தித்துத் தனிப்பட்ட சந்திப்பாகும். இதில் அரசியல் இல்லை.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இந்தச் சூழல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உகந்தது அல்ல. கூட்டணியில் இருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறிவிட்டார்கள், சில தலைவர்கள் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். சிலர் கடினமான பேரத்தில் போராடி வருகிறார்கள். இரு நபர் ராணுவம், ஒருநபர் ராணுவம் எல்லாம் தேர்தலில் தோற்கடிக்கப்படலாம். இன்னும் சில முக்கியத் தலைவர்கள் வெளியேய யோசிக்கிறார்கள். ஆதலால், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருணே ஷோரி ஆகியோரை முன்னிறுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு, கட்சியின் நடவடிக்கை போன்றவை மக்களிடத்தில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டன.

இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close