[X] Close

அழுக்கு சாக்ஸை தினந்தோறும் முகர்ந்த நபர்; மருத்துவமனையில் அனுமதி


socks

  • kamadenu
  • Posted: 22 Dec, 2018 10:56 am
  • அ+ அ-

தினந்தோறும் தன்னுடைய அழுக்கு சாக்ஸை முகந்து பார்த்த நபர் ஒருவர், கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ''தெற்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வேலை முடித்து  வீடு திரும்பிய பின்னர், தினந்தோறும் தன்னுடைய அழுக்கு சாக்ஸை முகர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அழுக்கு சாக்ஸில் இருந்து வீசிய வாடை அவருக்குப் பிடித்ததால், பல நிமிடங்களுக்குத் தொடர்ந்து தினமும் அதை முகர்ந்துள்ளார்.

நாட்பட்ட இந்த பழக்கத்தால், சாக்ஸில் இருந்த பூஞ்சைகளின் காரணமாக தொற்று ஏற்பட்டுள்ளது. முகரும்போது இந்தத் தொற்று நுரையீரலுக்குப் பரவியுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கவேண்டும் என்று மருத்துவர்கள்அறிவுறுத்தினர்.

அத்துடன் அழுக்கு சாக்ஸை முகர்ந்ததாலேயே தொற்று ஏற்பட்டதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமாதிரியான சம்பவம் மருத்து உலகில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close