[X] Close

பிரதமர் ரணில் உட்பட 30 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு; இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: அதிபரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு, போலீஸ் துறை


new-cabinet-srilanka

  • kamadenu
  • Posted: 21 Dec, 2018 10:46 am
  • அ+ அ-

இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதில் பிரதமர் ரணில் உட்பட 30 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு, போலீஸ் துறையை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வுக்கும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் இதில் மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அரசியல் குழப்பம்

எதிர்பாராத திருப்பமாக கடந்த அக்டோ பர் 26-ம் தேதி பிரதமர் ரணில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். இதன் பின் நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர், பொதுத்தேர்தல் தேதியையும் அறி வித்தார்.

இதை எதிர்த்து ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது. பொதுத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

இதன்பின் நாடாளுமன்றத்தில் நடந்த நம் பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ரணில் பெரும் பான்மை பலத்தை நிரூபித்தார். ஆனால் இந்த வாக்கெடுப்பை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துவந்தார்.

ராஜபக்ச ராஜினாமா

இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்ச வுக்கு எதிராக ரணில் உட்பட 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ராஜபக்ச பிரதமராக செயல்பட தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதன்காரணமாக கடந்த 15-ம் தேதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சில நாட்களுக்கு முன்பு புதிய அமைச் சரவை பட்டியலை அதிபரிடம் பிரதமர் ரணில் அளித்தார். இதுதொடர்பாக அதிபரும் பிரதமரும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சரவை பட்டிய லில் முக்கிய திருத்தங்களை அதிபர் செய்தார். 35 பேர் கொண்ட பட்டியலை பிரதமர் ரணில் அளித்ததாகவும் இதில் சிலரை அதிபர் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின் அதிபர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அதிபர் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் ரணில் உட்பட 29 பேர் அந்தந்த துறைகளின் அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றனர். இந்த அமைச்சரவையில் அதிபர் சிறி சேனாவும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சரவை தலைவராக செயல்படுவார் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பு மற்றும் போலீஸ் துறையை அதிபர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள் ளார். ஒட்டுமொத்தமாக இலங்கை அமைச்சரவையில் அதிபர், பிரதமரையும் சேர்த்து 30 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவி யேற்றவுடன் அதிபருடன் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் நேற்று பதவியேற்ற அமைச்சர்கள் அதிபருடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுக்கவில்லை. இரு தரப்புக்கு இடையே இன்னமும் மோதல் நீடிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close