[X] Close

சான்டாவாக மாறி குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா


barack-obama-delights-children-as-santa-in-surprise-visit-to-hospita

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Dec, 2018 11:30 am
  • அ+ அ-

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் சான்டா க்ளாஸ் போல் வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை குதூகலிக்கச் செய்தார்.

குழந்தைகள் தேசிய மருத்துவமனைக்கு கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி பரிசுப் பொருட்கள் அடங்கிய மூட்டை சகிதமாக அவர் சென்றார்.
முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவரள், செவிலியர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறினார். விடுமுறை காலம் என்றுகூட பாராமல் குழந்தைகளுக்கு தொண்டாற்றுவதற்காக அனைவருக்கும் வாழ்த்து சொன்னார்.

பின்னர், மருத்துவமனையின் ஒவ்வோர் அறையிலும் நுழைந்து சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். இதனால், குழந்தைகள் பெருமகிழ்ச்சி கொண்டனர். அவர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்நிகழ்வு குறித்து ட்விட்டரிலும் பதிவிட்டார். கடந்த ஆண்டு ஒபாமா சிறார் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று பரிசுப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா வருகைக்கு நன்றி தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் தனது ட்விட்டரில் ஒபாமா வருகை வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close