இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்ச நியமனம்

கொழும்பு
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே கருத்து வேறுபாடு கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக கடந்த அக்டோபர் 26-ம் தேதி ரணிலை பதவி நீக்கம் செய்த சிறிசேனா, புதிய பிரதமராக மஹிந்த ராஜ பக்சவை நியமித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக கடந்த 16-ம் தேதி ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 17-ம் தேதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்தப் பின்னணியில் நாடாளுமன்றம் நேற்று கூடியது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவை சபாநாயகர் கரு ஜெயசூர்யா நியமித்தார். இதற்கு ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
லங்கா சுதந்திர கட்சியின் தலைவராக அதிபர் சிறி சேனாவும், லங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் தலை வராக மஹிந்த ராஜபக்சவும் பதவி வகிக்கின்றனர். இருவரும் ஓரணியாக செயல்படுகின்றனர்.
எனினும் நாடாளுமன்றத்தில் லங்கா சுதந்திர கட்சிக்கே அதிக எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் குறைந்த எம்.பி.க்க ளை கொண்ட லங்கா பொது ஜன பெரமுனா தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங் கியது ஏன் என்று எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள னர். இதுதொடர்பாக அவையில் விரிவாக விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா உறுதியளித்துள்ளார்.