[X] Close

குழந்தைகளின் நினைவாற்றல், கல்வித்தரத்தை உயர்த்தும் இசை வகுப்புகள்


music-class-lessions

  • kamadenu
  • Posted: 28 Mar, 2018 10:41 am
  • அ+ அ-

மாணவர்களின் கல்வி ஈடுபாட்டை வளர்க்க இசை வகுப்புகள் கை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் அவர்களின் அறிவாற்றல் திறன்களை மேம்படுவதோடு, மொழி அடிப்படையிலான தர்க்கஅறிவும், குறுகிய கால நினைவாற்றல் பெறவும் முடிகிறது என்கிறார்கள் அவர்கள். 

இசை ஆற்றல் நன்மை பயக்கும் என்பதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும் நமது கல்விமுறையில் உள்ள பொதுவான பாடத்திட்டத்தில் இசைக்கு இடமில்லாமல் இருக்கிறது என்கிறார். ஆய்வு மாணவர் ஆர்சூர் ஜாஸ்கே. இவர் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார்..

இனி ஆய்வுமாணவர் ஆர்சூர் ஜாஸ்கே சொல்வதைக் கேட்கலாமே......

''அறிவாற்றல் சார்ந்த திறமைகளில் இசைப் பாடங்கள் ஒரு நேர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதை ஒரு நீண்டகால ஆய்வில் தெரிந்துகொள்ள முடிந்ததே எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்விதமாக உள்ளது. கல்வியில் சாதிக்க இது அடித்தளமாக இருக்கலாம் என்பதையும் உணரமுடிந்தது.

மாணர்களிடம் பரிசோதனை

ஆய்வில் கண்டறியப்பட்டவை உளவியல் சார்ந்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. ஆய்வாளர்கள் டச்சு மொழியில் படிக்கும் 147 பள்ளிக்குழந்தைகளிடம் தங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, கல்வி மற்றும் ஆய்வு அமைச்சகம் ஒரு நுண்கலைக் கல்வி நிபுணர்கள் மையத்துடன் இணைந்து ஒரு கட்டமைக்கப்பட்ட இசை முறை உருவாக்கப்பட்டது

வழக்கிலுள்ள ஆரம்பக் கல்வி பாடத்திட்டத்துடன், இசை அல்லது விசுவல் நுண்கலை வகுப்புகளும் துணைப்பாடமாக அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இதனை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றின.  இதில், குழந்தைகள் புத்தகக் கல்வி மற்றும் செயல்முறைப் பாடங்கள் இரண்டும் வழங்கப்பட்டன.

இரண்டரை ஆண்டுகள் இந்த முறை தொடர்ந்தது. பின்னர் மாணவர்களின் கல்வி ஈடுபாடுகள் மதிப்பிடப்பட்டன. அதேபோல், திட்டமிடல் மற்றும் நினைவாற்றல் திறன்கள் உள்ளிட்ட பல்வேறுஅறிவாற்றல் திறன்களும் மதிப்பிடப்பட்டன.

குறிப்பிடத்தக்க அறிவாற்றல்

மற்ற மாணவர்களை ஒப்பிடும்போது இசைப் பாடங்களைப் பெற்ற மாணவர்கள் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் பெற்றுள்ளதை கண்கூடாகக் காணமுடிந்தது.

காட்சியியல் கலை வகுப்புகள் ஒரு நன்மை இருக்கிறது.

எந்த துணைப் பாடத்தையும் பெறாதவர்களோடு ஒப்பிடும்போது, இவ்வகுப்பின்குழந்தைகள் .குறிப்பிடத்தக்க காட்சி மற்றும் இடம்சார்ந்த குறுகிய கால நினைவாற்றலைப் பெறுகிறார்கள். 

இசைவகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் மொழி அடிப்படையிலான பாடங்களில் கூடுதல் வளர்ச்சியும் ஏற்றுக்கொண்ட முழுமையான பணிகளை நிர்வகிக்கவும்திட்டமிடுதலுக்கான திறன்களின் வளர்ச்சியையும் பெற்றுள்ளார்கள்.

ஒட்டுமொத்த செயல்திறனுக்கும் உதவியாக..

இந்த பரிந்துரை இசைப் பாடங்களை மாணவர்கள் பெறும்காலத்திலேயே அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாத பாடங்களில் அறிவாற்றல் திறன் வளர்வதைக் காணமுடிந்தது. இது ஒட்டுமொத்த மேம்படுத்தப்பட்ட கல்வி செயல்திறனுக்கு வழிவகுத்துள்ளது.

ஆம்ஸ்டர்டாமில் மட்டுந்தானா இது சாத்தியம்? உலகம் முழுமைக்கு இது பொருந்துமே. பாடத்திட்டங்களினால் அவதியுறும் நம்ம ஊர் குழந்தைகளுக்கு இப்படியொன்று வந்தால் நிச்சயம் அவர்களது கல்வி மேம்படுவதோடு ஆளுமையிலும் பெரும் மாற்றங்கள் நிகழுமே.

பால்நிலவன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close