[X] Close

துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய கேரள சிறுவன்


dubai-software

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 09:56 am
  • அ+ அ-

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன் ராஜேஷ். 13 வயது மாணவனான இவர் தனது 9 வது வயதில் இருக்கும்போது செல் போன் செயலி ஒன்றை உரு வாக்கினார். பொழுதுபோக்காக இவர் உருவாக்கிய செயலி மிகவும் பிரபலமடைந்தது. மேலும் இணையதள வடிவமைப்பு, லோகோக்கள் வடிவமைப்பிலும் ஆதித்யன் ஆர்வம் காட்டினார்.

5 வயதாக இருந்தபோதே கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டிய ஆதித்யன் ராஜேஷ் இன்று 13 வது வயதில் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உரிமையாளராகியிருக்கிறார். ‘டிரைநெட் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் துபாயில் இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வரு கிறது என்று கலீஜ் டைம்ஸ் பத்தி ரிகை செய்தி வெளியிட் டுள்ளது.

இதுகுறித்து ஆதித்யன் ராஜேஷ் கூறும்போது, “இணைய தளம் மூலம் டைப்பிங் செய்வதைக் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் கம்ப்யூட்டர், இணைய தளம், வடிவமைப்பில் எனது ஆர்வத்தைப் பெருக்கிக் கொண் டேன். தற்போது 12 வாடிக்கை யாளர் களுடன் எங்களது நிறுவனம் இயங்கி வருகிறது. அவர்களுக்கு டிசைன், கோடிங் சேவைகளை தற்போது இலவசமாக வழங்கி வருகிறோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close