[X] Close

ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு: ஆச்சர்யத்தில் ரஷ்ய மக்கள்


orange-snow-in-russia

  • நந்தினி வி
  • Posted: 27 Mar, 2018 15:47 pm
  • அ+ அ-

ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது மக்களிடையே ஆச்சர்யத்தையும் சிறிது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ருமேனியா, மால்டோவா உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வெள்ளை நிறம் தவிர்த்து ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு நிகழ்வது அந்நாட்டு மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


குறிப்பாக, ரஷ்யாவில் கடந்த 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற சோச்சி நகரில் உள்ள மலைத்தொடர்களிலும், அதன் வளைவுகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதால், அந்த பகுதி முழுவதும் பாலைவனம் போன்று காட்சியளிக்கிறது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாகச வீரர்கள் ஆரஞ்சு நிற பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.


சஹாரா உள்ளிட்ட அரேபிய பாலைவனங்களில் அடித்து வரப்படும் மணல் மற்றும் தூசு ஆகியவை வளிமண்டலத்தில் தேங்குவதன் காரணமாக, இத்தகைய வண்ண மாற்றம் நிகழ்ந்து ஆரஞ்சு நிறத்தில் பனிப்பொழிவு ஏற்படுவதாக வானிலை நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close