[X] Close
 

முன்னாள் உளவு அதிகாரி மீதான ரசாயன தாக்குதல் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக திரளும் ஐரோப்பிய நாடுகள்


expel-four-russian-diplomats

  • நெல்லை ஜனா
  • Posted: 27 Mar, 2018 15:41 pm
  • அ+ அ-

பிரிட்டனில் வசித்து வரும் ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்று திரண்டு வருகின்றன. பிரிட்டனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டு, தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய வெளியுறவு அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டுள்ளன.

பிரிட்டனில் வசித்து வரும் ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரியான செர்ஜி ஸ்கிரிபால் (66) அவரது மகள் யுலியா (33) ஆகிய இருவரும் கடந்த 4-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் (நரம்பு மண்டலம்) பாதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நச்சுப்பொருளை உடலில் செலுத்தி இவர்களைக் கொல்ல ரஷ்யா முயற்சி செய்ததாக பிரிட்டன் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது.

இந்த விவகாரத்தால் பிரிட்டன், ரஷ்யா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றி வந்த 23 அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக, ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றி வரும் 23 அதிகாரிகளை ஒரு வாரத்தில் வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், கலாச்சார ஒத்துழைப்புக்கான பிரிட்டிஷ் கவுன்சிலை மூடுமாறும் உத்தரவிட்டது. தங்கள் நாட்டுக்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தாங்களும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் ரஷ்யா கூறியது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து உக்ரைன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, செக் குடியரசு, லிதுவேனியா, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், சுவீடன், கரோடியா, ருமேனியா, பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன. தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற  அந்நாடகள் உத்தரவிட்டுள்ளன.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close