[X] Close

புகைக்கும் யானை: வைரலாகும் வீடியோ


smoking-elephant-baffles-wildlife-experts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Mar, 2018 10:46 am
  • அ+ அ-

ஒரு யானை புகை பிடிக்கிறது என்பது கேட்பதற்கு நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால், மைசூருவில் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை புகையை உள்ளிழுத்து வெளியிடும் செய்கை பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவானது வனவிலங்கு பாதுகப்பு சமூகத்தின் ஆராய்ச்சியாளர்களால் கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் அது வைரலாகி வருகிறது.


யானை ஒன்று இத்தகைய செய்கையில் ஈடுபட்டிருப்பது இதுவே முதன்முறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து யானைகள் குறித்த ஆய்வாளர் வருண் ஆர்.கோஸ்வாமி கூறும்போது கூறும்போது, "அந்த யானை, காட்டுத்தீயில் எரிந்த மிச்சத்திலிருந்து கரித்துண்டை எடுத்து வாயில் வைத்து பின்னர் புகையை உள்ளிழுத்து வெளியே விடுகிறது. மிச்சமுள்ள சாம்பலை உட்கொள்கிறது.


கரித்தூளில் பெரிதாக யானைக்குத் தேவைப்படும் சத்து என்று ஏதுமில்லை. ஆனால், அதிலிருக்கும் மருத்துவ குணங்களால் விலங்குகளுக்கு அதன் மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், கரித்தூள் நல்ல மலமிளக்கி என்பதால், காட்டுத்தீ, மின்னல் தாக்குதல், தீ விபத்துகளுக்குப் பின்னர் விலங்குகள் இதை உட்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது" என்றார்.


இந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக், பாக்ஸ் நியூஸ், சயின்ஸ் மேகசின் போன்ற ஊடகங்கள் ஷேர் செய்துள்ளன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close