[X] Close
 

மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுகிறதா? - ஃபேஸ்புக் விளக்கம்


we-don-t-save-android-users-data-without-permission-facebook

  • நெல்லை ஜனா
  • Posted: 26 Mar, 2018 15:51 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்துபவர்களின் ஒப்புதல் இன்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் மறுத்துள்ளது. 

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பல எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் தாண்டி ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ட்ரம்பின் வெற்றிக்கு ரஷ்யாவின் தொடர்பு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசியல் தகவல் ஆய்வு மற்றும் மக்களின் உளவியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா,  ஃபேஸ்புக் பயனாளிகள் ஐந்து கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கிய ஒருவரின் தகவல்கள் அனைத்தும் அவரது ஒப்புதலின் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக நியூசிலாந்தில் புகார்கள் எழுந்தன. ஆன்ட்ராய்டு மொபைல் போனில் இதற்கான வசதிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளதாவது:
‘‘ஆண்ட்ராய்டு போன் வழியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் மெசேஜ் பயன்பாட்டை பெறுபவர்களின் அனுமதியின்றி அவர்களது தகவல்களை ஃபேஸ்புக் சேமித்து கொள்வதாக தகவல் வெளியானது. இதில் துளியும் உண்மையில்லை.

பயன்படுத்துபவர்களின் ஒப்புதல் இன்றி யாருடைய தகவல்களையும் பேஸ்புக் சேமி்ப்பதில்லை. அவர்கள் ஒப்புதல் தெரிவித்து அதற்குரிய அனுமதியை தந்தபிறகு மட்டுமே ஃபேஸ்புக் நிறுவனம் சேமிக்கிறது. அதுபோலவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றால் அதை நாங்கள் வலியுறுத்துவதில்லை.

வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தகவலையும் மூன்றாவது நபர்கள் யாருக்கும் வழங்குவதும் இல்லை’’ என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close