[X] Close

உலகின் மிகபிரமாண்டமான கப்பல் புறப்பட்டது: என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?


royal-caribbean-takes-delivery-of-world-s-largest-cruise-ship

  • போத்திராஜ்
  • Posted: 26 Mar, 2018 13:51 pm
  • அ+ அ-

உலகின் மிகப்பெரிய, பிரம்மாண்டமான கப்பல் என்று அழைக்கப்படும் சிம்பொனி ஆப் தி சீஸ் அதன் கட்டுமானத்தளமான பிரான்சின் செயின்ட் நசைரே நகரில் இருந்து புறப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனமான எஸ்டிஎஸ் இந்த பிரம்மாண்ட கப்பலை நிர்மானித்து அதை அமெரிக்காவின் ‘தி ராயல் கரீபியன் இன்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் முறைப்படி ஒப்படைத்தது.

ஏறக்குறைய 36 மாதங்கள் இந்த கப்பல் திட்டமிட்டு கட்டப்பட்டது. இந்த கப்பலின் எடை 2 லட்சத்து 28 ஆயிரம் டன் ஆகும். கப்பலின் நீளம் 363 மீட்டராகும். அதாவது அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டிலும் 20 மீட்டர் நீளமாகும்.

இதற்கு முன் இதேபோன்ற ஒரு கப்பல் கட்டப்பட்டது, அதற்கு ‘ஹார்மோனி ஆப் தி சீ’ எனப் பெயரிடப்பட்டது. சிம்பொனி ஆப் தி சீஸ் கப்பலின் சகோதரி என்று இதனை அழைக்கிறார்கள்.

இந்த கப்பலையும் எஸ்டிஎஸ் நிறுவனம் தயாரித்து, அதை கடந்த 2016ம் ஆண்டு ராயல் கரிபீயன் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

‘சிம்பொனி ஆப் தி சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு, நீர்விளையாட்டு, ஒரு கூடைப்பந்தாட்ட மைதானம், சினிமா தியேட்டர், நீச்சல் குளம், ஷாப்பிங் காம்ப்ளஸ், மதுபார் என ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் மொத்தம் 8 ஆயிரம் பயணிகள், 2500 ஊழியர்கள் வரை பயணிக்க முடியும்.

ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சார்ட் பெயின் கூறுகையில், ‘இந்த கப்பல் முதலில் ஸ்பெயின் நாட்டில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் மலாகா நாட்டுக்கு புறப்படுகிறது. இப்போது இந்த கப்பல் பிரான்ஸில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் மியாமி நகருக்கு வந்து கொண்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

எஸ்டிஎஸ் நிறுவனம் சிம்பொனி என்ற பெயரில் ராயல் கரிபீயன் நிறுவனத்துக்கு கட்டிக்கொடுக்கும் 13-வது கப்பலாகும். 2020-ம் ஆண்டுக்குள் மேலும் இரு கப்பல்களை கட்டிக்கொடுக்க எஸ்டிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close