[X] Close
 

போலியாக செய்தி கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை: மலேசிய அரசு


malaysia-government-proposes-10-years-in-jail-for-fake-news

  • பாரதி
  • Posted: 26 Mar, 2018 13:21 pm
  • அ+ அ-

போலியாக செய்தி கொடுத்தால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை என்ற மலேசிய அரசின் அறிவிப்பு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனக் குரல்களைப் பெற்றிருக்கிறது.

மலேசிய அரசு இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு புதிய சட்ட மசோதாவை முன்மொழிந்தது. அதன்படி போலியாக செய்தி வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் எனக் கூறியது. இந்த மசோதாவுக்கு anti-fake news bill எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தகைய கெடுபடி சட்டம் பத்திரிகையாளர்கள் உரிமையைப் பறிக்கும் செயல் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த வரைவு மசோதாவில், "ஏதேனும் ஒரு செய்தியோ, தகவலோ, புள்ளிவிவரமோ அல்லது அறிக்கைகளோ முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தவறாக இருப்பினும், ஏதாவது வீடியோ அல்லது ஆடியோ மக்களிடம் தவறான கருத்தப் புகட்டும்படி இருப்பினும் அது போலி செய்தியாகக் கருதப்படும். இது மலேசிய மக்களை பாதிக்கும் வகையில் இருந்தால் வெளிநாட்டு ஊடகங்களாக இருந்தாலும் நடவடிக்கை பாயும்" என எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், இச்சட்ட மசோதா, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் இது ஊடகத்தின் கைகளைக் கட்டிவைக்கவும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் முன்வைக்கப்பட்டுள்ளது" என மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஓங்க் கியான் மிங் தனது ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close