[X] Close
 

எனக்கு ஒரு கனவு இருக்கிறது.. மார்டின் லூதர் கிங் வழியில் பேத்தி


i-have-a-dream-says-martin-luther-kings-granddaughter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Mar, 2018 10:46 am
  • அ+ அ-

'எனக்கு ஒரு கனவு இருக்கிறது' இது இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த மார்டின் லூதர் கிங்கின் வலிமைமிக்க பேச்சின் முதல் வரி. அவர் அடுக்கிய கனவுகள் அத்தனையும் ஒடுக்கப்பட்ட கறுப்பர் இன மக்களின் குரலாக இருந்தது. 
வரலாற்றில் மறக்க முடியாதது அந்த பேச்சும், லூதரின் கம்பீரக் குரலும் அத்துடன் எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்ற அந்தத் துவக்கமும்.


அன்று தனது தாத்தா எப்படி அந்த உரையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தாரோ அதேபோல் இன்று அவரது பேத்தியான யோலண்டா ரென்ஸ் கிங்கும் வலிமைமிக்க அதே 'எனக்கு ஒரு கனவு இருக்கிறது' வார்த்தைகளுடன் ஓர் உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

 


துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் மாணவ, மாணவியர் பேரணிகளை நடத்தினர். பெருநகரங்களிலும் குக்கிராமங்களிலும் நடைபெற்ற இந்த பேரணிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட யோலண்டா ரென்ஸ் கிங், நேஷனல் மால் அருகே அந்த வலிமைமிக்க உரையை நிகழ்த்தினார்.
மார்டின் லூதர் கிங் ஜூனியரின் 9 வயது மகளான யோலண்டா பேசியது இதுவே:


"அன்று எனது கொள்ளுத்தாத்தா அவருடைய 4 குழந்தைகளும் நிறத்தால் கணிக்கப்படாமல் அவர்களது குணத்தால் கணிக்கப்பட வேண்டும்" எனக் கனவு கண்டார்.
இன்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நடந்தது எல்லாம் போது. இந்த உலகம் துப்பாக்கியற்றதாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தை எல்லோரிடமும் பரப்புங்கள். இத்தேசம் எதிர்கால தலைமுறையினரால் சிறப்பானதாக இருக்க வேண்டும்"
என்றார். 


ட்ரம்புக்கு எச்சரிக்கை:
பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் பேசிய மாணவ பிரதிநிதிகள், அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு துப்பாக்கி கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும், இல்லையெனில் அடுத்த தேர்தலில் வாக்குரிமை மூலம் ஆட்சியை அகற்றுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அமெரிக்கா மட்டுமன்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நகரங்களிலும் பேரணிகள் நடைபெற்றன.
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close