[X] Close

சவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்: அமைச்சரவையிலும் முக்கிய மாற்றம்


saudi-army-commander-sudden-dismantling-a-major-change-in-the-cabinet

  • Team
  • Posted: 28 Feb, 2018 05:33 am
  • அ+ அ-

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெறுகிறது. கடந்த 1930-ல் அப்துலஜீஸ் அல் சவுத் என்பவர் அந்த நாட்டை உருவாக்கினார். அவரது குடும்பத்தினர் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். தந்தைக்கு பின் மகன் என்ற நடைமுறையை பின்பற்றாமல் அரசு குடும்பத்தில் ஜனநாயக முறையில் மன்னரும், பட்டத்து இளவரசரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தற்போதைய மன்னர் சல்மான் கடந்த 2015 ஜனவரி 23-ல் பதவியேற்றார். பட்டத்து இளவரசராக முகமது பின் நய்யீப் பொறுப்பு வகித்தார். போதை மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மன்னர் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் கடந்த 2017 ஜூனில் பட்டத்து இளவரசராக பதவியேற்றுக் கொண்டார். இதன் பின் ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த நவம்பரில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 11 மூத்த இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி இறுதியில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சவுதி அரேபிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அப்துல் ரஹ்மான் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை தளபதியாக பயாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ராணுவத்தின் மூத்த தளபதிகள், விமானப் படையின் மூத்த தளபதிகள் பலர் மாற்றப்பட்டு புதியவர்கள் அந்த பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சராக தமாதுர் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் பெண் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close