[X] Close

ஆஸ்திரேலியாவில் இந்தியா வெல்லப்போகிறது என்பதுதான் உண்மை: ஷேன் வார்னே பளீர்


shane-warne-comments-about-india-australia-tour

ஷேன் வார்ன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 17:12 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாதான் டெஸ்ட் தொடரில் வெல்லும் என்பதுதான் உண்மை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே பளீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒருமுறைகூட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆலன்பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் மோசமான பேட்டிங் ஃபார்ம், முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது போன்றவை அந்த அணியின் நம்பிக்கையைக் குலைத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது, தென் ஆப்பிரிக்காவிடம் ஒருநாள், டி20 தொடரில் படுதோல்வியைச் சந்தித்து ஆஸ்திரேலிய அணியில் மனவலிமை குன்றி இருக்கிறார்கள். இந்திய அணி கடைசியாக கடந்த 2003-04ம் ஆண்டு பயணத்தின்போது 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கங்குலி தலைமையில் சமன் செய்தது. அதன்பின் சிறப்பாகச் செயல்படவில்லை.

ஆனால் இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்ன் ஆஸியில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், டி20, ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அனைத்து வகையிலும் சீரழிந்து இருக்கிறது. அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள மிகவிரைவாக ஏதாவது செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இந்தியாதான் வெற்றி பெறப்போகிறது.   இதுதான் உண்மை. நான் சொல்வதைப் பார்த்து ஆஸ்திரேலிய அணியினர் பயப்படவில்லை.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது வேதனையாக இருக்கிறது. போட்டிகளில் வீரர்கள் தேர்வு செய்து விளையாடும் ஷாட்கள், போட்டியின் சூழலை அறியாமல் விளையாடுவது போன்றவை என்னை வேதனைப்படுத்தப்படுகின்றன.

 மோசமான ஷாட்களை ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து தேர்வு செய்து விளையாடுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என நினைக்கிறேன்.

கடினமான சூழலில்கூட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தவறான முடிவுகளை ஏன் எடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தவறான ஷாட்களை தேர்வு செய்து விளையாடி போட்டியை கணிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு ஷேன் வார்ன் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close