[X] Close

பயணங்களும் பாதைகளும்: 5- ஜெர்மனியின் எல்லைச்சாமி


payanagalum-paathaigalum

  • kamadenu
  • Posted: 05 May, 2018 12:32 pm
  • அ+ அ-

நமக்குத்தெரிந்த "மே டே" எல்லாம் தொழிலார்கள் தினம். இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நிச்சயமாகத் தொழிலாளர் தினமாக மட்டுமல்ல.

ரோம் நாடுகளில் ஃப்ளோரேலியா, அதாவது ஃப்ளோரா எனப்படும் பூக்களின் தேவதையை கொண்டாடும் நாள், ஐரோப்பிய நாடுகளில் கோடையின் முதல் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நாங்கள் இது போன்ற ஒரு மே தினத்தில், ஜெர்மனியின் பக்கம் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமத்திற்கு சில நாட்கள் விடுமுறைக்குச் சென்றிருந்தோம். ஐரோப்பியாவில் இது போன்ற சிறிய நகரம் அல்லது கிரமத்தில் நிறைய வீடுகள் வாடகைக்குக் கிடைக்கும். ஹோட்டலில் தங்குவதைவிட வாடகை மிகக் குறைவாகவே இருக்கும். தவிர, கிட்சனெட்டும் சேர்த்து வாடகைக்குக் கொடுக்கப்படுவதால், நமக்குத்தேவையான உணவை நாம் சமைத்துச்சாப்பிடலாம். வெஜிடேரியனாக இருந்தால் வெளியே சாப்பிடுவது மிகவும் சிரமம். மாமிசம் கலக்காத உணவு வகைகள் எங்கே கிடைக்கும் என்று தேடி தேடி... பசியைக்கூட நாம் மறந்துவிடுவோம்.

மே முதல் தேதி. வாசல் கதவைத்திறந்து வெளியே தூரத்தில் தெரியும் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களைப் பார்க்காமல் எனக்குப் பொழுது விடியாது. வெளியே கதவைத்திறந்ததும் வாசலில் ஒரு பெரிய கூடை நிறைய அழகான மலர் கொத்துக்கள், மற்றொரு கூடையில் வீட்டில் தயார் செய்யப்பட்ட விதம் விதமான சாக்லேட்டுக்கள் அழகிய பேப்பர்கள் சுற்றி, கலர் ரிப்பனால் கட்டப்பட்டு , ஹாப்பி மே டே என்ற கார்டுடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப்பழக்கம் ஐரோப்பிய நாடுகளில் பல வருடம் முன்வரை இருந்து தற்போது மறக்கப்பட்டு வருகிறது. 
பழக்கத்தை இன்னும் மாற்றாமல் சம்மர் சால்ஸ்டைஸ் கொண்டாடும் வீட்டு சொந்தக்காரருக்கு நன்றி சொல்ல அவர்கள் இருக்கும் தனி மாடிக்குச்சென்றால், கதவு பூட்டப்பட்டிருந்தது. காரணம், இந்த ஒரு நாள், நம் ஊரில் கொண்டாடப்படும் சித்ரா பெளர்னமியைப்போல, கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரு பொது திடலுக்குச்சென்று கலர் தெளித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன், பெரிய பியர் கானைத்திறந்து, அதிலிருந்து குடித்து, அங்கேயே சாப்பிட்டு, மத்தியானமாக வீடு திரும்புவார்களாம்.

கதை இன்னும் முடியவில்லை. இப்போது ஒரு சினிமா போல் நீங்கள் விஷுவலைஸ் செய்து பார்க்க வேண்டிய கதை.
இது ஒரு கிரமத்துக் கதை. தமிழ் சினிமாவைப் போல் .இரண்டு கிராமங்கள் . கிராம தலைவர்களுக்குள் போட்டி ...யார் பெரியவர் என்று .

என் இனிய தமிழ் மக்களே.....கதை....திரைக்கதை ...வசனம்....இயக்கம்......உங்கள் பாரதிராஜா... ஸ்டைலிலான கதை.
இதேதாங்க இங்கே....ஜெர்மனியிலும். 

இந்த புகைப்படத்தில் இருப்பது தான், இந்த ஊரு எல்லை சாமி. ஒவ்வொரு கிரமத்திற்கும் இதைப் போல் ஒரு கொடி கம்பம் உண்டு. சரி, இதற்கும் மே டே-க்கும் என்ன சம்மந்தம்?

இந்தக் கொடி கம்பம் பற்றி சில விஷயங்கள்...
இந்த ஊர் கிராமத்திருவிழா......ஒவ்வோர் ஆண்டும் மே 1. அதாவது மே டே அன்று பழைய கொடிக்கம்பம் எடுக்கப்பட்டு புதியது ஒன்று வைக்கப்படும் . இந்தக் கம்பத்தில் அந்தக் கிராமம் பற்றிய ஒரு snap shot இருக்கும். கிராமத்தின் முக்கிய தொழில் .....இதைக் காட்ட ஒரு சின்னம்...dairying என்றால் மாடுகள், தொழிற்சாலைகள் என்றால் அந்த அந்தப் பொருட்கள், விவசாயம் என்றால் டிராக்டர்.

இப்படியாக, இதைத் தவிர , அந்த வருடத்திற்கான முக்கிய ஏற்பாடுகள் .....கடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள்,கிராம வளர்ச்சி திட்டங்கள்.. இப்படி கிராமம் பற்றிய ஒரு நோட்டீஸ் போர்ட் போல அமைக்கப்படுகிறது அந்த கொடிக்கம்பம்.

அந்த வருடத்திற்கான கம்பம் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, அந்தக் கிராம மக்களால் இரவு முழுவதும் பாதுகாக்கப்படும். சுற்றிப் படுத்துக்கொண்டு விடுவார்கள் . காரணம், இதைத் திருடிக் கொண்டு செல்லும் கிரமம் , தங்கள் கொடி கம்பத்தைச் சுற்றி இவற்றை வைத்து தங்கள் வெற்றியை பறை சாற்றுவார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகக் கொடி கம்பம் திருடப்படுகிறதோ அந்தக் கிராமமே அதி பராக்கிரம கிராமம் என்று கருதப்படும்.

நாட்டாமை .....தீர்ப்பைச் சரியா சொல்லு...
நாங்கள் இருந்த இடத்தில் அவர்கள் கொடி கம்பம் திருட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்டு , அடுத்த நாள் நாங்கள்
வீடு திரும்பும்போது அங்கே அந்தத் திடலில் பள பளவென்ற புதிய கம்பம் ஒன்று நடப்பட்டிருப்பதைப்பர்த்துக்கொண்டே சென்றோம்.

-லதா ரகுநாதன்

தொடர்புக்கு: lrassociates@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close