[X] Close

பயணங்களும் பாதைகளும்- 2: குறை காப்பீடுகள்


payanangalum-paathaikalum

  • kamadenu
  • Posted: 14 Apr, 2018 15:26 pm
  • அ+ அ-

இன்று இந்தியாவில் : மளிகை சாமான் வாங்க ஏதோ ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். ஏன் ஏதோ என்று சொல்கிறேன் என்று தோன்றினால்.....ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்....கேள்வி கேட்பது சுலபம்...ஆனால் பதில் சொல்வது. அதுவும் கன்வின்ஸிங்காக......மிகவும் கடினம்..... ஜோக் அபார்ட்.... சொல்லாததற்குக் காரணம்...நான் சொல்லப்போகும் விஷயம் இது எல்லா ஷாபிங் மால்களின் தலைவிதி எனும் காரணத்தால்.....

அன்று ஜெர்மனியில் :

இது ஃப்ளாஷ் பாக் சிம்பல்...

நான் ஜெர்மனி சென்றிருந்தபோது நடந்தது.

அது ஒரு மிகப்பெரிய மல்டி ஸ்டோரீட் கடை. ஒரு ஷாபிங் மாலில் இருக்கும் யாவையும் அந்த ஒரே கடையில் உண்டு. சாமான்களும் ஃஹோல்சேல் விலையில்

அதனால் அங்கே எப்போதும் கூட்டம் தான். ஒரு எஸ்கலேடர் மூவில்.... வீட்டுத்தேவைப் பொருட்கள் யாவையும் மேலும் கீழும் சென்று கொண்டே இருக்கும்...வாங்கிய நாரீமணிகளுடன்.

எங்கள் தேவை சில பல ஹோம் ஃபர்னிஷிங்ஸ். இரண்டாயிரம் சதுரடி பரப்பில் .....ஏதேதோ கொட்டிக்கிடக்க......பார்த்ததுமே தேவைகள் திடீர் திடீர் என்று மனதில் உதிக்க.....ஒரு கோடியில் இருந்த காபி ஷாப்பின் மணம் வேறு மனதை கிறங்க அடிக்க.....

ஏதோ ஒரு மயக்கத்தில் மனம் மயங்கிக்கிடக்க.....

டமால்......

பெரியதாக ஒரு சத்தம்.

வெகு சின்னதாக இருந்த ஒரு கார்டன் ஸ்டூலில்....அதில் எல்லாத் திசைகளிலும் தளும்பிச்சிதறும் வண்ணம் வெகு

அதிகமாகப் பெருத்துக்கிடந்த மூதாட்டி ஒருவர் அமர்ந்து பார்க்க.....

நட் வேறு , ஸ்க்ரூ வேறு அவர் கை வேறு கால் வேறு... இப்படி.....தரையெங்கும் ஒரே பொருள் சிதறல்.

ஷ்...புஷ்...நஷ்.....ஜெர்மன் மொழியின் தமிழாக்கம்.....ஓஹ்....சாரி...அடிபட்டுவிட்டதோ......கேட்டுக்கொண்டே வந்த கடைக்கார பெண்....கீழே விழுந்தவரைத் தூக்கி நிறுத்த.... அவர் தன் பங்கிற்கு....ஏதோ...ஷ்...புஷ்...நஷ்..... என்று சொல்லிவிட்டு....வெளியே சென்றுவிட்டார்.

எனக்குத் தாங்கவில்லை......மகனிடம்...என்ன இது பெரியதாக சண்டை வரும் என்று பார்த்தால்....ஒன்றுமே நடக்காதது போல் இருவரும் சென்று விட்டார்கள்.

அது அப்படித்தான்......!!

சரி.....டாமேஜஸ்....கடைக்கார ஓனர் அண்ணாச்சி வரவே இல்லை....இவரும் விலையைப் பார்க்கவில்லை....மத்தியஸ்தம் செய்து வைக்க ஒருவரும் வரவில்லை... நாட்டாமை...தீர்ப்பை மாத்தி எழுதுன்னு இந்த ஜெர்மன் அம்மணியும் சண்டைப்போடவில்லை......என்ன நடக்குது இங்கே.....??

இப்படி எல்லாம் நடக்க முடிந்ததற்கு....காரணம் ....இன்ஷ்யூரன்ஸ். இங்கே அனைவரும் ஷாப்பிங்

இன்ஷ்யூரன்ஸ் எடுத்து விடுகிறார்கள். இப்படி உடைபடும் பொருட்களின் விலையைக் கடைக்காரர் க்ளேய்ம் போட்டுப் பெற்றுவிடுகிறார்கள்.

இதே போல்...நம் வீட்டிற்கு டென்னிஸ் தி மெனஸ் போல் ஒரு வாண்டு வந்தால்.....நமக்கு ஏற்படும் திக் திக் .... .எது உடையுமோ.... உடைந்தால்.....அவர்களிடம் எப்படிச்சொல்லி பணம் கேட்பது.....அவர்கள் சொல்லப்போவது....என் பையன் அப்படியே அந்தக் கிருஷ்ணர் போல...ஒரே விஷமம்...வால்தனம்....என்று பெருமையாக சிலாகித்துச்செல்லும் அபாயம் . ஆகப் பிறந்த நாள், தெருவில் கிரிகெட்....இவை போன்ற சந்தர்ப்பங்களில் ..நமக்கு எகிறும் BP....

ஆனால், ஜெர்மனியில் இவை எல்லாவற்றிற்கும் காப்பீடுகள் உள்ளது.

சரி, இப்போது நடந்த என்ன...??

நிகழ்காலத்திற்கு வருவோம்.

அது மளிகைச்சாமான் வைத்திருந்த இடம். ஒரு நடுவயது பெண், அவளின் ப்ளஸ் டூ பெண், மற்றும் ஒரு செவண்டி ப்ளஸ் பாட்டி....தாயாரா..மாமியாரா தெரியவில்லை..... ப்ளஸ் டூ பெண் காஸ்மெடிக்ஸ் விற்பனை பகுதியில் மூழ்கி இருக்க....நடு வயது பெண், ட்ராலியில் பொருட்கள் எடுத்து

வைத்துக்கொண்டிருக்க..... எதையோ பார்த்தபடி சென்ற பாட்டி கை பட்டு கண்ணாடி பாட்டில் ஒன்று கீழே விழ....

அங்கு நடந்த வார்த்தைப்போரில்...என் காதில் பட்ட சில வாக்கியங்கள்...

குருட்டுக்கிழம்.....வந்து சேர்ந்திருக்குப்பார் கிழட்டுப்பொணம், செலவு வெக்க நேரம் பார்த்து அலையறது பார்... போகவேண்டிய வயதில்.....இது கூட வந்தவர்கள்.

அய்ய... தினத்தோரும் இப்படி ஒரு சாவுகிராக்கி வந்துடுது.... இப்பத்தான அல்லாததையும் அடுக்கி வெச்சு நிமிற்றேன்.... இந்த ஸூப்பர்வைசர் கழுத்தறுக்க வந்துடுவான்... இரண்டு தபா மூணு தபா.... தொடைச்சி எடுத்தாலும்... கால் ஒட்டுது கை ஒட்டுது......

அந்த வயதானவரின் கண்களில் கண்ணீர் , ஆனால் நடுங்கும் கைகளால் துடைக்க முடியவில்லை.

பாதுகாப்புத்திட்டங்கள் பற்றிப் பேசப்படுகிறது.. இவ்வாறு நடைபெறும் ஒரு அன்றாட கலாமிட்டி கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. இந்தியாவில் பிபி வந்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலே சொன்ன நிகழ்ச்சியை ஒரு உதாரணமாகப் பார்த்தால் போதும். வயதுக்குக் கொடுக்கப்படாத மரியாதை ஒரு மன உளைச்சல். தன்னால் வீண் செலவு அதற்கு என்ன தண்டனை என்ற பயம் ஒரு புறம்..

ஆனால் .... இந்தியாவின் முன்னேற்றத்தில் இவை பற்றி பேசப்படுவதில்லை.......!!!!

லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close