[X] Close

பயணங்களும் பாதைகளும்: 1- இது பொம்பளைங்க சமாச்சாரம்


payanangalum-pathaigalum

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 15:20 pm
  • அ+ அ-

என்னுரை:

'ப.பா...' இது கட்டுரைத் தலைப்பின் சுருக்கம் இல்லை. பயணங்கள் கொடுக்கும் அனுபவங்களுக்கு நான் காட்டும் உணர்ச்சி... ப் பா..வின் சுருக்கம்தான் இது. நாம் செல்லும் இடம் யாவும் நமக்கு ஏதோ ஒரு கதையைச் சொல்கிறது. சந்திக்கும் ஒவ்வொரு புது மனிதரும் ஓர் உணர்ச்சியைக் காட்டுகிறார். நடக்கும் சம்பவங்கள் பல பாடங்களை உணர்த்துகின்றன. இந்த அனுபவங்கள் யாவும் வேறொரு நாட்டில் என்றால் சுவை கொஞ்சம் அதிகமாகித்தான் போகிறது. இப்படி நான் பார்த்தவையாவும் என் பார்வை வழியே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பயணக்கட்டுரையா என்றால் இல்லை. சரி எங்கு என்ன பார்க்க வேண்டும் என்ற அலசலா என்றால்
அதுவும் இல்லை. பயணக்கட்டுரையும் (travelogue) இல்லை, (travel guide) அலசலும் இல்லை பின் என்ன தான் எழுதப்போகிறேன்..
நான் பார்த்தவை என்னிடம் ஏற்படுத்திய சில உணர்வுகள்,சில அதிர்வுகள், சில மாற்றங்கள், பல ஏமாற்றங்கள். இதில் காரம், சிரிப்பு ,கோபம், அழுகை....எல்லாம் இருக்கும்.
இதோ உங்களுக்கான முதல் கட்டுரை.

இது பொம்பளைங்க சமாச்சாரம் 

அன்று கொடைக்கானலில் லேக் சுற்றி லாங் வாக். சீசன் போது இந்தக்கூட்டம் பெறும் தொந்தரவு . அதனால் தான் கோடைக்காலத்தில் கோடையைய் நாங்கள் தவிர்ப்போம். அந்தத் தடவை என்ன ஆனாலும் சரி என்று கிளம்பி வந்துவிட்டோம்.ஊர் முழுவதும் குப்பை ,எதோ ஒரு வித அசுகந்த ஸ்ருங்கார் வேகம் , லேக்கை சுற்றி சகட்டு மேனிக்கு அலையும் மாடுகள் - எப்போது இங்கே இருந்த குதிரைகள் மாட்டுருவம் அடைந்ததோ ?
சரி விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு “பொம்பளைங்க சமாச்சாரம்”
வேறு என்ன இது Loo சமாசாரம் தான் . லேக்கைச்சுற்றி பொது கழிப்பிடங்கள் இருக்கின்றன .ஆனால் நுழையத்தான் நாம் ஸ்பைடர் வுமன் ஆக இருக்க வேண்டியது முக்கியம்.அப்போது தானே காலைக் கீழே வைக்காமல் நினைத்ததை முடிக்கமுடியும்.

we are Indians and we live in India. மோடியின் ஸ்வச் பாரத் சும்மா பாரத் தான் என்பது மோடியே அறிந்த உண்மை.
இப்போது விவகாரம் இதுவல்ல. நமக்கு இரண்டு வகையான closet தெரியும்,இண்டியன் மற்றும் வெஸ்ட்டெர்ன் .எதை எதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் இதில் தான் ப்ராப்ளம் வந்தது ஜெர்மனி சென்ற போது. அங்கு ஒவ்வொரு loo விலும் ஒவ்வொரு விதமான உபயோகமுறை .

ஒருமுறை இதுபோல் ஒன்றில் எனக்கு ஏற்பட்ட படபடப்பு தான் இப்போதைய கட்டுரை.

ஒரு நிமிடத்தில் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. நம் ஊர் மண்ணெண்ணெய் க்யூ போல் இருந்த ஒன்றில் சேர்ந்து நின்று கொண்டிருந்தேன் . ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும் .இவ்வளவு கூட்டத்திற்கு அந்த இடம் அவ்வளவு சுத்தம். டாய்லட் கிருமிநாசினி விளம்பரம் போல் கையால் தொட்டு அந்த டாக்டர் போல் உள்ளங்கையை முகத்திற்கு எதிரே காட்டலாம் .
இந்த விளக்கத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது.

க்யூவில் நின்றிருந்த நான் எனது முறை வந்ததும் உள்ளே சென்றேன். அந்தச் சுத்தத்தில் நான் சென்ற காரணத்திற்கு அதை உபயோகிக்கவே தயக்கமாக இருந்தது. வெளியே நின்றுகொண்டிருந்த பெரிய க்யூ நினைத்து வேலையை முடித்து flush செய்யப் பார்த்தால் ஒரு இடத்தில் கை symbol போட்டிருந்தது. அதை ஒரு அமுக்கு அமுக்கினேன் .Seat cover எட்டுக்கால் பூச்சியைப்போல் சுத்த ஆரம்பித்தது .சரி இது முடிந்து தண்ணீர் வரும் என்று பார்த்தால். சமத்தாக முன்பிருந்தது போல தன் இடத்தில் அமர்ந்துகொண்டது.

என்ன கஷ்டகாலம். இங்கு ஒரு கழிப்பறை உபயோகிக்க ராபர்ட் லேங்டன்னாக இருக்கவேண்டும் போல. இந்த flushing techniqe நிறைய விதம். சில இடத்தில் button , இதுவும் சில வேளை மேலே பல சமயம் பக்கத்தில் என்று பூச்சாண்டி காண்பிக்கும். 
சில நேரம் நிமிடக் கணக்கில் நாம் இருக்கோமா, முடித்தோமா எதையும் சட்டைச்செய்யாமல் auto flush செய்து தன் கடமையைத் தானே முடிக்கும். சில சமயம் ஒரு கை வரையப்பட்டு அதன் மேல் கை வைத்தால் தானியங்கி சென்ஸார் முறையில் (auto sensor technique) தண்ணீர் வரும்.

இப்படி எல்லா வித Langdunism மும் உபயோகித்துப்பார்த்து வெறுத்து அழகையே வந்துவிட்டது. நம் ஊர் போல் என்னாமா இம்மாம் நேரமா என்று யாரும் சத்தம் போடவில்லை. ஆனால் அந்த இடத்தில் நாம் நேரம் காப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தவர் அறிந்திருக்கக் கூடும்.

என்ன செய்தும் ,ம்ஹூம், அந்தக் கவர் சுற்றிச் சுற்றி வந்தது. தண்ணீர் வரவில்லை .எவ்வளவு நேரம் உள்ளேயே இருப்பது? ஆனது ஆகட்டும் வாசலில் என்ன மாமனா மச்சானா திரும்பிப்பார்கவா போகிறோம்? இருந்தாலும் ரொம்ப அவமானமாக இருந்தது. These. Indians என்று அவர்கள் நாளைப் பேசக்கூடும்.
வேறு வழியின்றி கதவைத்திறந்தால்..

உஷ்.......சத்தத்தோடு auto flush . கதவைத் திறந்து மூடினால் தானே தண்ணீர் விட்டுக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டது. அப்பாடா, நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு. இதற்கு என்று இல்லாமல் எதற்கும் தான்.

-லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close