[X] Close

ஜெ.வுக்கும் பாரத ரத்னா: அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தல்


bharat-ratna-award-for-jayalalitha-too-says-admk-mp-maithreyan

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 12 Aug, 2018 13:55 pm
  • அ+ அ-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பதிவில் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இன்றைய செய்தித்தாள்களில் பாரத ரத்னா குறித்துச் செய்திகள் வெளிவருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜாஜி, சி.வி.ராமன், காமராஜ், எம்ஜிஆர், அப்துல் கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் சி.சுப்ரமணியன் ஆகியோர் மட்டுமே பாரத ரத்னா கவுரவம் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகும்.

டிசம்பர் 5,2016 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டின் பெரிய கவுரவத்தை வழங்க வேண்டும் எனவும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல், 2017-ம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத் தொடர்களில் கூட அதிமுக எம்.பி.க்கள் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்து 600 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அதிமுக-வினர் மற்றும் தமிழக மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் மைத்ரேயன்.

மேலும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானத்தை தனது ஃபேஸ்புக் பதிவுடன் மைத்ரேயன் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close