[X] Close

தமிழக அரசின் நீர் மேலாண்மையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது: ராமதாஸ்


ramadoss-criticize-tamilnadu-government-for-waterbody

பாமக நிறுவனம் ராமதாஸ் | கோப்புப் படம்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 12 Aug, 2018 11:58 am
  • அ+ அ-

தமிழக அரசின் நீர் மேலாண்மையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது என்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 

தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், கடந்த ஜூலை 23-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. அதன் பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், மேட்டூர் அணை யின் நீர்மட்டமும் 117 அடியாகக் குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. 

நீர் அதிகளவு திறக்கப்பட்டு இருந்தாலும், சில பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்று பாமக நிறுவனம் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. ஆனாலும் காவிரி கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. தமிழக அரசின் நீர் மேலாண்மையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது!" என்று குறிப்பிட்டு இருக்கிறார் ராமதாஸ்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close