[X] Close

அண்ணா சதுக்கத்தில் அமைதியாக நடந்த கருணாநிதி உடல் நல்லடகம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவுக்கு குவியும் பாராட்டு


amudha-ias-wins-hearts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Aug, 2018 13:13 pm
  • அ+ அ-

அண்ணா சதுக்கத்தில் அமைதியாக நடந்த கருணாநிதி உடல் நல்லடக்க நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்காக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பெருந்திரளாக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்துவர திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்திலிருந்து அண்ணா சதுக்கத்துக்கு வந்தடைந்தது.

அங்கு கருணாநிதியின் உறவினர்கள், மாநில தேசியத் தலைவர்கள் என பெரும் புள்ளிகள் குவிந்திருந்தனர். ஆளுநர் பன்வாரி லால் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இவை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது வென்னிற ஆடையில் ஒருவர் பரபரப்பு ஏதும் காட்டாமல் துயரத்தில் இருந்தவர்களை ஒருங்கிணைத்தும் அஞ்சலி செலுத்த வந்தவர்களை பக்குவமாக வழிநடத்தியும் இறுதிச் சடங்குகள் அமைதியாக நிறைவேற உதவிக் கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் டிவி பார்த்த பொதுமக்கள் சிலர் யார் அந்தப் பெண்? கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என்று கேட்கத்தொடங்க அவர்தான் ஐஏஎஸ் அதிகாரி அமுதா என்று விவரமறிந்தவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டைக் குவித்துக் கொண்டிருக்கிறார் அமுதா ஐஏஎஸ்.

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்குகள் மெரினா கடற்கரை அண்ணா சமாதியில் எந்த சிக்கல் இல்லமாலும், முறையாக நடந்ததற்கும் பின்னால் இருந்து பணி புரிந்திருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா.

யார் இந்த அமுதா?
மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா கடந்த 1994-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் இவர். தற்போது சென்னை உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தருமபுரியில் ஆட்சியராக இருந்தபோது சிறந்த சேவைக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் விருது பெறும் அமுதா ஐ.ஏ.எஸ்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, அண்ணா சதுக்கத்தை நிர்வகிக்கும் பணி அமுதாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியானதில் இருந்து கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்குள் இடம் தேர்வு செய்வது, குழி வெட்டுவது, விஐபிக்கள் அமரும் இடத்துக்கு சாமியானா அமைப்பது என பல பணிகளையும் துரிதமாக அவர் ஒருங்கிணைத்திருக்கிறார்.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகளையும் அமுதாவே செய்திருக்கிறார். 

அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close