[X] Close

கருணாநிதி, ஜெயலலிதா இன்னும் சில பிரபலங்களைச் சுமந்த அந்த ஆம்புலன்ஸ்!


leaders-united-by-an-ambulance-service

படம்: ஆர்.ரகு

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Aug, 2018 11:10 am
  • அ+ அ-

கருணாநிதி, ஜெயலலிதா முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இவர்கள் கட்சியால் பிரிந்திருந்தாலும்கூட இவர்களது மரணத்தில் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார் பி.ஆர்.எம்.எம்.சாந்த குமார். 

இவர் ஃப்ளையிங் ஸ்குவாட் ஆம்புலன்ஸ் சர்வீஸின் நிறுவனர். மேற்கூறிய தலைவர்களின் உடலை மருத்துவமனையில் இருந்து அவர்களது இல்லத்துக்கும் பின்னர் அங்கிருந்து அஞ்சலி இடத்துக்கும், இறுதியாக அடக்கம் செய்யுமிடத்தற்கும் பத்திரமாக கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு இருக்கிறது.

சிவாஜி கணேசன், சோ ராமசாமி, ஜி.கே.மூப்பனார், அஞ்சலி தேவி ஆகியோரையும் இவரது ஆம்புலன்ஸ் வாகனம் தான் இறுதியாக சுமந்துள்ளது.

தனது ஆம்புலன்ஸ் சேவை குறித்து குமார் தி இந்து (ஆங்கில நாளிதழிடம்) கூறியதாவது:

எனக்கு 58 வயது ஆகிறது. வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றேன். ஆனால், சொந்தமாக தொழில் செய்யவே விரும்பினேன். அதன் விளைவாக ஃப்ரீஸர் பாக்ஸ் மெஷினைக் கண்டுபிடித்தேன். அதற்கான காப்புரிமையையும் பெற்று வைத்திருக்கிறேன்.

சிவாஜி கணேசன் உடலை பாதுகாக்க எனது ஃப்ரீஸர் பாக்ஸ் பயன்படுத்தப்படும் வரையில் எனக்கு பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை. அதன்பின்னரே எனக்கு மிகப் பெரிய அளவில் அடையாளம் கிடைத்தது. 

ஜெயலலிதாவுக்காக பயன்படுத்தப்பட்ட பெட்டியும், கருணாநிதிக்காக பயன்படுத்தப்பட்ட பெட்டியும் தொழில்நுட்ப ரீதியாக மிகமிக முன்னேறியது. 10 நாட்கள்வரை சடலத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்தப் பெட்டிகளில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருந்தது. மாநிலத்தின் இருபெருந் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க முடிந்ததை பெருமிதமாகக் கருதுகிறேன்.

எங்களது ஆம்புலன்ஸ் சேவையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அரசியல் எதிரியான ஜெயலலிதாவுக்கு சேவை செய்த நிறுவனம் என்று எந்த கசப்புணர்வும் கொள்ளாமல் தங்களது தலைவருக்கு பிரியாவிடை சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் கருணாநிதியின் குடும்பத்தினர்.

குறிப்பாக கனிமொழி எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தார். இதற்கு முன்னர் இல்லாத வகையில் கருணாநிதியை அடக்கம் செய்யும்போது கயிறு கட்டி பெட்டியை உள்ளே இறக்காமல் தானியங்கி முறையில் பெட்டியை உள்ளே இறக்கினோம்" என்றார்.

ஃப்ளையிங் ஸ்குவாட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்துக்கு 26 ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ரூ.35 லட்சம் மதிப்புடையது. ஹைதராபாத் உள்ளிட்ட 16 இடங்களில் கிளைகள் உள்ளன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close