[X] Close

மும்பை தாராவியில் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி!


when-karunanidhi-helped-fund-a-dharavi-school

படம்: பிரசாந்த் நக்வே

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Aug, 2018 16:35 pm
  • அ+ அ-

சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் மும்பை தாராவியைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்கள் பகுதியில் சமுதாய பள்ளிக்கூடம் அமைக்க உதவுமாறு கோரியுள்ளனர்.

அதை ஏற்றுக்கொண்ட கருணாநிதி மும்பையில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட சமுதாய பள்ளிகூடத்துக்காக நிதி திரட்டப்பட்டிருக்கிறது. அந்த நிதியில் பள்ளிக்கூடம் கட்டியதுபோக அலுவலகத்துக்காக ஓர் இடம் வாங்கவும் பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வாங்கவும் பணம் இருந்துள்ளது.

இதனால்தான் கருணாநிதியின் மறைவுக்கு தாராவி மக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். திமுகவின் மும்பை பகுதி பொறுப்பாளர் ஆர்.பழனிசாமி இதை நினைவு கூர்ந்தார்.

மும்பைக்கு வரும்போதெல்லம் தாதர் பார்ஸி ஜிம்கானாவிலும் ஆதர்ஷ் நகர் மைதானத்திலும் கருணாநிதி தமிழர்களை சந்திப்பார். ஆனால் 1983-க்குப் பிறகு அவர் மும்பை வரவில்லை என பழனிசாமி கூறினார்.

சியான் கோலிவாடா பகுதியில் நேற்று ஏராளமானோர் திரண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இரங்கல் கூட்டமும் நடந்திருக்கிறது. இதற்கு பாஜக எம்.எல்.ஏ., கேப்டன் ஆர்.தமிழ் செல்வன் தலைமை வகித்திருக்கிறார்.
கருணாநிதி சொன்னதைப் பின்பற்றிய ஒருசில தலைவர்களுள் ஒருவர் என்று அவர் புகழ்ந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close