[X] Close
 

செல்லப்பிராணிகளின் பிரியர் கருணாநிதி!


the-former-chief-minister-and-his-canine-friends

  • பாரதி
  • Posted: 09 Aug, 2018 12:54 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றால் அங்கு வராண்டாவில் ராஜாஜி, காமராஜ், தென்னரசு ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அலங்காரமாக நிற்பதைப் பார்க்க முடியும். அதே வேளையில் வராண்டாவை நோட்டமிடும் எவரும் கருணாநிதி அவர் வளர்த்த நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது.

லாசா அப்ஸோ இனத்தைச் சேர்ந்த அந்த நாயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பளிச்சிடும். அந்த நாய்க்குட்டி கருணாநிதியின் வீட்டில் ஒரு விஐபியைப் போலவே உலா வரும். 

வாயில்கதவுக்கு அருகே சென்று குரைத்தால், கருணாநிதி வீடு திரும்பிவிட்டார் என்று எல்லோருமே தெரிந்துகொள்ளலாம். அவர் ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது அந்த நாய்க்குட்டி அவரை வழியணுப்புமாம்.
தினமும் இரண்டு வேலை தவறாமல் அவரது செல்ல நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போடத்தவற மாட்டார் என்கின்றனர் கருணாநிதியை நெருக்கமாக அணிந்தவர்கள்.

ஒருமுறை கொடைக்கானல் செல்லும்போது அந்த நாய்க்குட்டியையும் கருணாநிதி கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார்.
கவிஞர் இளையபாரதி கூறும்போது, "கருணாநிதிக்கு நாய்கள் மீது அவ்வளவு பிரியம். தென்பாண்டி சிங்கம் சீரியல் தயாரிப்பு தொடர்பாக ஒருமுறை அவரை நேரில் பார்த்தேன். அப்போது தலைவர் டிவியில் தென்பாண்டி சிங்கம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் தொடங்கும்போது கருணாநிதி தோன்றி பேசுவார். அப்போது, அவரது வளர்ப்பு நாயும் அவருடன் இருந்தது. டிவி திரையில் கருணாநிதி தோன்றியவுடன் அருகே சென்று உற்று உற்று அந்த நாய் நோக்க கருணாநிதி உடனே, "பாரு பாரு, அப்பா டா" என்றார்.

அவரது ஆலிவர் ரோடு இல்லத்தில் டாஸ்சன்ட் வகை நாய் ஒன்று வளர்ந்தது. சிஐடி காலணி இல்லத்தில் சிங்கம் என்ற பக் வகை நாய் இருந்தது. கருணாநிதிக்கு இந்த நாய்க்குட்டிகள் மீதும் அலாதி பிரியம். வீட்டில் வளர்த்த நாய்கள் மட்டுமல்ல அண்ணா அறிவாலயத்தில் சுற்றிவந்த தெருநாய் ஒன்றும்கூட கருணாநிதியின் அன்பைப் பெற்றிருந்தது. அவர் அங்கு நடைப்பயிற்சி செல்லும்போது அந்த தெருநாய் அவருடன் செல்லும். நிறைய பொதுக்கூட்டங்களில் அந்த நாய் குறித்து கருணாநிதி பேசியிருக்கிறார்.

நாய்கள் மட்டுமல்லாமல் இன்னும் பிற செல்லப்பிராணிகளும் கருணாநிதிக்கு பிரியமானதாக இருந்துள்ளன. அவரது நடை தடுமாறியபோதுதான் கோபாலபுர இல்லத்தில் நாய்கள் வளர்ப்பது நிறுத்தப்பட்டது. கருணாநிதியின் காலடியில் புரளும் செல்லப்பிராணிகளால் அவர் தவறி விழுந்துவிடக் கூடாது என்பதாலேயே அவற்றிற்கு தடை விதிக்கப்படன.

- ப.கோலப்பன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close