[X] Close
 

கருணாநிதி நினைவலைகள் 5: அவர் ஏன் 1984 தேர்தலில் போட்டியிடவில்லை?


karunanithi-didn-t-contest-1984-election

  • பாரதி
  • Posted: 08 Aug, 2018 17:24 pm
  • அ+ அ-

1957-ல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக திமுகவின் எம்.எல்.ஏ. ஆனார் கருணாநிதி.  13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு எல்லாத் தேர்தலிலும் வெற்றி பெற்றவர் அவர்.

ஆனால் அப்பேற்பட்ட தலைவர் 1984 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. 1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அவரும் க.அன்பழகனும் தத்தம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

கருணாநிதி மேலவை உறுப்பினராக ஆகிவிட்டார்.  அவர் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே போட்டியிடவில்லை என்பது மேலோட்டமான கருத்தாக இருந்தாலும்கூட கருணாநிதி விரும்பியிருந்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

 ஆனால், போட்டியிடுவதைத் தவிர்த்த கருணாநிதியின் அந்த முடிவு இன்றளவும் அரசியலில் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலின்போதுதான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் அப்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியிருந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984-ல் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததால். காங்கிரஸ் மீது அப்போதும் அனுதாப அலை இருந்தது. 

இந்தக் கணக்குகளை சரியாக கணித்த கருணாநிதி, 1984 தேர்தல் எம்ஜிஆருக்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்தி தேர்தலில் போட்டியிடவில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஒரு கட்சியின் தலைவருக்கு தொலைநோக்குப் பார்வை எவ்வளவு அவசியமானதோ அவ்வளவு முக்கியமனது தேர்தல் அரசியலின் நெழிவு சுழிவுகளைத் தெரிந்து வைத்திருப்பது. அதில் எப்போதுமே கருணாநிதி வல்லவர்தான்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close