[X] Close

தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாவின் சுயவசனமும் கருணாநிதியின் சுடச்சுட பதிலும்


m-r-radha-and-karunanidhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 16:16 pm
  • அ+ அ-

தன்னையோ தனது கொள்கையையோ அல்லது தலைவரையோ தாக்கிப்பேசுபவர்களுக்கு சுடச்சுட பதிலளிப்பதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தூக்குமேடை நாடகத்தின்போது எம்.ஆர்.ராதா திடீரென பேசிய சுயவசனத்துக்கு கருணாநிதி அளித்த பதில்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு தூக்குமேடை என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்ததோடு அதில் நடிக்கவும் செய்தார் கருணாநிதி. அப்போது எம்.ஆர்.ராதாவுக்கு அண்ணா மீது அதிருப்தி இருந்தது.

இதனால், அந்த கோபத்தில் "தூக்குமேடை கதை வசனம் அறிஞர் கருணாநிதி" என்று எழுதிய பதாகைகளை நகரமெங்கும் வைத்தார். அண்ணாவுக்குரிய சிறப்புப் பெயரை தான் பெருவதா என்று கருணாநிதி கொதித்தார். 

இந்த விளம்பரத் தட்டி அப்புறப்படுத்தப்பட்டால் ஒழிய தான் நாடகத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் எம்.ஆர்.ராதா தட்டிகளை அகற்றச்சொல்ல அதன் பின்னரே கருணாநிதி நாடகத்தில் நடித்தார்.
அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா, வைதீர்கர் வேடத்தில் அபிநேச முதலியார் என்ற வேடத்தில் நடித்து வந்தார். கருணாநிதியோ புதுமை விரும்பும் மாணவனாக நடித்தார்.

அப்போது அறிஞர் அண்ணாவை மக்கள் தளபதி என்ற அடைமொழியிலும் அழைத்துவந்தனர்.

இதை கேலி செய்யும் வகையில் ஒருநாள் நாடகத்தில் திடீர் வசனமாக, "ஏண்டா! தளபதி அண்ணா என்கிறார்களே! உன் அண்ணன் எத்தனை போர்க்களத்துக்குச் சென்றான் எந்த கோட்டையைப் பிடித்தான்? எத்தனைப் பேரைக் கொன்றான்? எவ்வளவு பிணத்தின் மீது நடந்தான்?" என்று கேட்க உடனே கருணாநிதி சுடச்சுட பதில் அளித்தார்.
"வீணை மீட்டப்படுவதற்கு முன்னரே வீணைதான், வாள் வீசப்படுவதற்கு முன்னரே அதற்கு வாள் என்றுதான் பெயர். அதேபோல் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே அதற்கான படைவீரர்களை தயாரிப்பவர் எனது அண்ணா" என்றார்.
நாடகக் கொட்டகையே கைதட்டலால் அதிர்ந்தது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close