[X] Close
 

பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக போராடுவேன்: சட்டப்பேரவையில் முழங்கிய கருணாநிதி


karunanidhi-on-backward-classes

  • பாரதி
  • Posted: 08 Aug, 2018 15:10 pm
  • அ+ அ-

பின் தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன் என முழங்கியவர் கருணாநிதி. சட்டப்பேரவையில் 1969-ம் ஆண்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது கருணாநிதி ஆற்றிய உரை அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்பதை பறைசாற்றும் பேச்சு.

25.1.69 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு கருணாநிதி ஆற்றிய பதில் உரையில் இருந்து..

"நான் சமுதாயத்தில் மிகப் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புப் பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு. நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தினால், பின்தங்கிய வகுப்பினரின் நலனுக்காக என் உயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்.

நான் இப்படிக் கூறுகின்ற சமயத்தில் முன்னேறிய சமுதாயத்திற்கு எந்த விதமான ஆபத்தும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்வேன்" என்று பேசினார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close