[X] Close
 

அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அதிமுக கொடி


admk-flag

  • பாரதி
  • Posted: 08 Aug, 2018 12:49 pm
  • அ+ அ-

உளுந்தூர்ப்பேட்டை அருகே ஏ குமாரமங்கலம் கிராமத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை ஒட்டி அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி உளுந்தூர்ப்பேட்டை அருகே ஏ குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட அக்கட்சிகளின் நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக கிளை செயலாளர் அரசனும் அதிமுக கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டார்.
இது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது. இதை அறிந்த விழுப்புரம் எஸ் பி ஜெயகுமார் தலைமையிலான போலீஸார் நேரில் ஆய்வு செய்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசி அதிமுக கொடியை மீண்டும் முழு கம்பத்தில் பறக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் சிறிது நேரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.நீலவண்ணன்

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close