[X] Close

ட்விட்டர் ட்ரெண்டில் இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கருணாநிதி


twitter-trends

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 11:32 am
  • அ+ அ-

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் 10 இடங்களிலும் கருணாநிதி தொடர்பான செய்திகளே இடம்பெற்றுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நேற்று (7.8.2018) அன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். 

இந்நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் முதல் 10 இடங்களிலும் கருணாநிதி தொடர்பான செய்திகளே இடம்பெற்றுள்ளன. 
அவரது உடல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத் துறை பிரபலங்கள் செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில், மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கோரிய வழக்கில் அந்த போராட்டக்காரருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்திருக்கிறது. மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் #MadrasHighCourt  #Karunanidhideath #RajajiHall #Marina4Kalaignar #Marinabeach #JusticeSSSundar Thol Thirumavalavan MadrasHc RapidActionForce GandhiMandapam ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close