[X] Close

கருணாநிதியின் கடைசி அரசியல் நேர்காணல் எது தெரியுமா?


karunanidhi-s-last-political-interview-was-to-the-hindu

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 08:44 am
  • அ+ அ-

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடைசியாக தி இந்து ஆங்கில நாளிதழுக்குத்தான் முழுமையான அரசியல் பேட்டி அளித்தார். மே 28 2016-ல் அந்தப் பேட்டியை அவர் அளித்தார். 2016 தேர்தல் முடிவுகள் வெளியாகி அப்போதுதான் சில நாட்கள் கடந்திருந்தன.

அந்தப் பேட்டிக்குப் பின்னர் வார இதழ் ஒன்றில் கருணாநிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் குறித்த பேட்டி ஒன்று வந்தது. அதன் பின்னர் அவரது உடல்நிலை குன்றியதால் அவர் வீட்டில் ஓய்வைத் தொடங்கினார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுகவுடன் தேர்தல் ஆணையம் கைகோத்து செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆளும் அதிமுகவால் அதன் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியாது என்று கணித்துக் கூறினார்.

"எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவால் எந்த ஒரு சவாலையும் சந்திக்க முடியும். ஆளுங்கட்சிக்குதான் எதிர்க்கட்சியாக எங்களைவிட நிறைய சவால்கள் இருக்கின்றன. அதிமுகவுக்கு 131 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும் ஒரு எம்.எல்.ஏ., மறைந்துவிட்டதால் 130 பேர் மட்டும்தான் இருக்கின்றனர். இவர்களை ஒன்றிணைத்து அலைபாயவிடாமல் பார்த்துக் கொள்வதே அதிமுகவுக்கு கயிறுமேல் நடப்பதுபோன்ற சவால்" என்று அவர் கூறினார். அவரது பேட்டியில் அதிமுகவின் ஆச்சர்யத்துக்கு சில திட்டங்கள் தங்களிடம் இருக்கிறது என்பது போல் ஒரு சூசகமான குறிப்பு இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் ஜெயலலிதா ஆட்சி அமைந்த 6 மாதங்களிலேயே மறைந்தார்.

அதன் பின்னர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவராலும் அந்த அரசியல் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close