[X] Close

ராஜாஜி அரங்கத்தை அதிர வைக்கிறது வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் முழக்கம்!


dmk-cadres-raise-slogans-for-marina

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 07:52 am
  • அ+ அ-

சென்னை ராஜாஜி அரங்கில் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜாஜி அரங்கத்தை தொண்டர்களில் "வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்" என்ற முழக்கம் அதிர வைக்கிறது.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு காலை 5.40 மணியளவில் சென்னை ராஜாஜி அரங்கிற்குக் கொண்டு வரப்பட்டது.
அதிகாலை முதலே அவருக்கு தலைவர்கள் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு கருணாநிதியின் மகனும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினின் கரங்களப் பற்றி ஆறுதல் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் சிவக்குமார் அவரது மகன் நடிகர் சூர்யா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close