[X] Close

இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை!- ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் ட்வீட்


harbhajan-tweets-in-tamil

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 21:18 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் ட்வீட் பதிவு செய்திருக்கிறார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 95. கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார். 

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், "சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் #RIPKalaignar #கலைஞர்" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close