[X] Close
 

மெரினாவில் இடமில்லை; காந்தி மண்டபத்தில் ஒதுக்கத் தயார்: தமிழக அரசு


no-place-in-marina

  • பாரதி
  • Posted: 07 Aug, 2018 20:04 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதியில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், காந்தி மண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும். அரசிதழில் இரங்கல் செய்தி வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்துள்ளதாக திமுகழக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரைமுருகன், "திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நானும் ஸ்டாலினும் சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை உறுதியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close