[X] Close

மனு கொடுத்துள்ளோம்; பதில் கிடைக்கவில்லை: துரைமுருகன்


durai-murugan-on-karunanidhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 19:55 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்துள்ளதாக திமுகழக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 95. கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் என்று அடக்கம் செய்யப்படும் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரைமுருகன், "திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நானும் ஸ்டாலினும் சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை உறுதியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close