[X] Close

இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Karunanidhi


karunanidhi-ripkalaingar-trends-in-twitter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 19:49 pm
  • அ+ அ-

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 95.

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் ட்விட்டரில் #Karunanidhi ட்விட்டரில் ட்ரெண்டானது.

இந்நிலையில், கருணாநிதி மறைவை ஒட்டி இந்திய அளவில் ட்விட்டரில்  #Karunanidhi #RIPKalaingar ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

கருணாநிதி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close