[X] Close
 

கருணாநிதி உடல்நிலை நிலவரம்: லேட்டஸ்ட் அப்டேட்


karunanidhi-latest-health-bulletin

  • பாரதி
  • Posted: 07 Aug, 2018 16:51 pm
  • அ+ அ-

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அந்த மருத்துவமனை சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில் 
"கடந்த சில மணி நேரங்களாகவே கருணாநிதியின் உடல்நிலை குன்றிவருகிறது.
அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக நிலையற்றதாக இருக்கிறது.
அவரது முக்கிய உள் உருப்புகளின் செயல்பாடுகள் குன்றிவருகின்றன"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த ஜூலை 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் சிறிய பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் முன்னேறியது ஆனால் நேற்றிரவு (திங்கள்கிழமை இரவு) அவரது உடல்நிலை மோசமடைந்தது. 'தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்" என்று மருத்துவமனையும் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close