[X] Close

தொண்டர்கள் சொல்வதைக் கேட்பவர் என் தலைவர் கலைஞர்!- நெகிழும் முதியவர்


the-story-of-80-yr-old-sadayappan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Aug, 2018 11:47 am
  • அ+ அ-

தொண்டர்கள் சொல்வதைக் கேட்பவர் என் தலைவர் கலைஞர் என 80 வயது திமுக தொண்டர் ஒருவர் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.

அப்படித் குவிந்திருந்த கூட்டத்தில் இரண்டு புகைப்படங்களுடன் கண்களில் கண்ணீர் புரள நின்றிருந்தார் ஒரு முதியவர். அவரது பெயர் சடகோபன் அந்த முதியவர் தனது கையில் 'கலைஞர் வாழ்க' என பச்சை குத்தியிருந்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, "எனது இரண்டு பிள்ளைகளும் இன்று ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கலைஞர்தான் காரணம். ஒரு முறை அவரை நான் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தேன். கையில் என்ன பச்சை குத்தி இருக்கிறாய் எனக் கேட்டார். எனது இரண்டு பிள்ளைகளும் ஆசிரியர்களாக இருக்கின்றனர். அதனால் சோறு சாப்பிடும்போதெல்லாம் உங்களை நினைக்க வேண்டும் என்பதற்காக வலது கையில் பச்சை குத்தியிருக்கிறேன் எனக் கூறினேன்.

அவரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவர் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டதால் அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினேன். அவரும் செய்தார். தொண்டர் சொல்வதைக் கேட்பவர் என் தலைவர் கலைஞர். இன்று அவர் படுத்துக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close