[X] Close

செல்ஃபோன் எனக்கூறி வங்கி மேலாளரிடம் சோப்புக் கட்டியை விற்று மோசடி


duo-cons-banker-palms-off-a-bar-of-soap-as-phone

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 11:14 am
  • அ+ அ-

சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியைச் சேர்ந்த மேலாளரை இரண்டு இளைஞர்கள் ஏமாற்றி செல்ஃபோன் எனக் கூறி சோப்புக் கட்டியை விற்றுச் சென்றுள்ளனர்.

ஏமாற்றப்பட்ட வங்கி மேலாளரின் பெயர் ரமேஷ். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு இளைஞர்கள் வந்து சந்தித்திருக்கின்றனர். அப்போது அவர்கள் தங்களை செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தங்கள் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சலுகை விலையில் உயர்தர செல்ஃபோனை விற்பதாகக் கூறியுள்ளனர். முதலில் ரமேஷ் அவர்கள் கூறியதை ஏற்கவில்லை. பின்னர், அந்த இருவரும் ரமேஷை எப்படியோ மூளைச் சலவை செய்துள்ளனர். செயல் விளக்கம் எல்லாம் செய்து காட்டியுள்ளனர்.

ரூ.1 லட்சம் சந்தை மதிப்பு கொண்ட ஃபோனை ரூ.15,000-க்குக் கொடுத்துள்ளனர். ரமேஷ் பணத்தைக் கொடுத்து ஃபோன் பெட்டியை வாங்கிக் கொண்டார். அந்த இளைஞர்கள் சென்றவுடன் ஃபோன் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது ரமேஷ் அதிர்ந்து போனார். அதில் ஃபோனுக்குப் பதிலாக சோப்புக் கட்டி மட்டுமே இருந்துள்ளது. இது குறித்து அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு அந்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். ரூ.1 லட்சம் மதிப்பிலான ஃபோனை எப்படி ரூ.15,000-க்கு விற்க முடியும் என்று வங்கியின் மேலாளராக இருப்பவருக்கே புரியாத நிலையில் சாமான்ய மக்கள் எம்மாத்திரம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close