[X] Close
 

அண்ணா அறிவாலயமும் அப்துல் கஃபூரும்!


a-souvenir-seller-his-cherished-memories-and-a-journey-that-spans-four-decades

  • பாரதி
  • Posted: 30 Jul, 2018 12:25 pm
  • அ+ அ-

கருணாநிதியின் உடல் நிலையில் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது என்றவுடன் கலக்கத்துடன் கழகத்தினர் காவேரி மருத்துவமனை வாசலில் குவிந்திருந்தனர். டிடிகே சாலையில் காவேரி மருத்துவமனைக்கு வெளியில் உள்ள நடைமேடையில் மவுனமாக அமர்ந்திருந்தார் ஒரு முதியவர். அவர் முகச்சுருக்கங்கள் சோக ரேகைகளால் இன்னும் அதிகமாகியிருந்தன.

அவரிடம் பேச்சுக் கொடுக்க தலைவருடன் தனக்கான பிணைப்பு எத்தகையது என்பதை அவர் விளக்கினார்.

எனது பெயர் எம்.அப்துல் கஃபூர். வயது 62. என்னுடைய 20-வது வயதிலிருந்தே திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வேன். ஏதோ சென்னையில் மட்டும் நடைபெறும் கூட்டங்களில் என நினைத்துவிடாதீர்கள் எந்த ஊராக இருந்தாலும் சரி ஓட்டோடிவிடுவேன். கருணாநிதியின் பொதுக்கூட்டங்களில் 40 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறார். திமுக தலைவர்கள் விழா மேடைக்கு வருவதற்கு முன்னதாகவே சென்று விடுவேன். கூட்டம் கலைந்து வெகு நேரம் கழித்தே அங்கிருந்து புறப்படுவேன். கூட்டத்துக்குச் செல்லும்போது திமுக கொடிகள், கருணாநிதியின் புகைப்படங்கள். கீச்செயின்கள் என்று என்னுடன் எடுத்துச் செல்வேன். தொண்டர்களிடம் அதை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டிக் கொள்வேன். எனக்கு உறுதுணையாக இருப்பது முரசொலி நாளிதழ். நாளிதழில் வரும் கருணாநிதியின் பயணத் திட்டங்களைப் பார்த்து எனது பயணத்தையும் திட்டமிட்டுக் கொள்வேன். பின்னர் அங்கு சென்று விடுவேன்.

சில நேரங்களில் கூட்டம் ரத்தாகியிருக்கும். அது தெரியாமல் நான் சென்று காலி கிரவுண்டை பார்த்துவிட்டு திரும்பிய நாட்களும் இருக்கின்றன. ஒரு சில அனுபவங்களுக்குப் பிறகு வெளியூர் செல்லும் போது திரும்பி வருவதற்கான பணத்தையும் எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 

கடந்த செப்டம்பர் மாதம்வரை அறிவாலயத்தின் பிஆர்ஓவாக ரவி என்பவர் இருந்தார். ரவி இருந்தவரை கடைசி நேர நிகழ்ச்சி ரத்து தகவல்களை தெரிவித்துவிடுவார். ஆனால் இப்போது ரவி இறந்துவிட்டார். எனக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. 

20 வருடங்களுக்கு முன்னால் ஒரு ருசியான சம்பவம் நடந்தது. அன்று எனக்குப் பிறந்தநாள். நான் தலைவரின் கோபாலபுரத்து இல்லத்துக்குச் சென்றேன். தலைவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் ஆசி பெற்றேன். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. 
இவ்வாறு அப்துல் கஃபூர் கூறினார்.

கருணாநிதியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டிருக்கும் கஃபூர் நான் ஒரு திமுககாரன் என்று பெருமிதத்துடன் சொல்கிறார். ஆனால், திமுக அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close