[X] Close

ட்விட்டர் முழுவதும் கருணாநிதி!


karunanidhihealth-trends-in-twitter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Jul, 2018 13:55 pm
  • அ+ அ-

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவிலும் சென்னை அளவிலும் கருணாநிதி சார்ந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அவரது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைக் குறிப்பிடும் வகையில் #Karunanidhi50 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இதுதவிர சென்னை அளவில் #Gopalapuram #KarunanidhiHealth ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்திய அளவில் #Karunanidhi #KauveryHospital ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி பலரும் கருணாநிதி நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் பிரபலங்களும் தலைவர்களும் கருணாநிதி நலம்பெற ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் கருணாநிதி விரைவில் நலம்பெற வாழ்த்தியிருக்கிறார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close