[X] Close
 

ஆதரவளித்த அதிமுக; விமர்சித்த ஸ்டாலின்


stalin-slams-admk

  • பாரதி
  • Posted: 21 Jul, 2018 10:43 am
  • அ+ அ-

மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட், 15-வது நிதி கமிஷ்ன், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு, மதவாத அரசியல் என இத்தனைக்குப் பிறகும்கூட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு கொடுக்கிறது என்றால் பாஜகவுக்கு ஏதோ கைமாறாகத்தான் அதிமுக இதை செய்திருக்க வேண்டும் என்பதற்கான மேலுமொரு சாட்சி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மீதான ஐடி ரெய்டால் பாஜகவுக்கு பலன் கிடைத்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக நேற்று மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. திமுகவுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லையென்றாலும்கூட தார்மீக அடிப்படையில் ஆதரிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close