[X] Close

ட்விட்டரில் ட்ரெண்டாக்கப்படும் #ZeroMpDmk


zerompdmk-is-trending-in-chennai

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jul, 2018 16:36 pm
  • அ+ அ-

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக தார்மீக அடிப்படையில் ஆதரிக்கும் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார் அதற்கு எதிர்வினையாக கேலியும் கிண்டலும் மீம்ஸ்களும் ஸ்டேட்டஸ்களும் உலா வரத் தொடங்கின.

தற்போது ட்விட்டரிலும் #ZeroMpDmk என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மக்களவையில் எம்.பி.க்களே இல்லாத நிலையில் திமுக எப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் எனக் கேள்வி எழுப்பி இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

இது சென்னை ட்விட்டர் ட்ரெண்டில் முன்னேறி வருவதை தமிழக பாஜக ஐடி செல் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளது.

திமுக பாஜக ஆதரவாளர்கள் இடையே இணைய போர் நடந்து வருகிறது. லண்டனில் இருந்து திரும்பிய ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin ட்ரெண்ட் செய்யப்பட அதை சிறிது நேரத்திலேயே வீழ்த்தி #WelcomStalin ட்ரெண்ட் செய்யப்பட்டது. 
#GoBackStalin பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று #ZeroMpDmk என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close