[X] Close
 

மீன்களில் ஃபார்மாலின் கலப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் 100 சதவீதம் உறுதி


no-farmaline-in-fishes-minister-jayakumar

  • kamadenu
  • Posted: 13 Jul, 2018 16:23 pm
  • அ+ அ-

மீன்களில் ஃபார்மாலின் கலப்பு இல்லை என்பது 100 சதவீதம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மாலின் கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், உணவுப் பாதுகாப்பு துறை, மீன்வளத் துறை ஆகிய மூன்றும் இணைந்து துறைமுகங்கள், மீன் இறக்குமாதியாகும் பகுதிகள், விற்பனையாகும் இடங்கள் ஆகியவற்றில் இருந்து மீன் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், எந்த மீன்களிலும் ஃபார்மாலின் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதான் நிதர்சனமான உண்மை. 

நிலைமை இப்படியிருக்கையில் மீன்களில் ஃபார்மாலின் இருக்கிறது, அதனைச் சாப்பிட்டால் உடல் நலக்கேடு ஏற்படும் என்ற செய்தியால் மீன் விற்பனை சரிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுகுறித்து மீனவர்களின் கருத்தைக் கேட்டோம். அவர்கள் தெளிவுடன் சொல்லிவிட்டனர். முன்பெல்லாம் மீன் பிடித்தவுடன் விற்பனைக்கு வந்துவிடும். இன்றைக்கு விசைப்படகுகளில் 15-20 நாட்கள் தாங்கக்கூடிய வகையில் குளிர்சாதன ஸ்டோரேஜில் -5, -10 டிகிரி குளிர்நிலையில் மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன. நடுக்கடலிலும் ஃபார்மாலின் கலந்து மீன்களை பாதுகாக்க வேண்டிய நிலைமை மீனவர்களுக்கு இல்லை.

சென்னையில் 100 சதவீதத்தில் 70 சதவீதம் தான் மீன் பிடிக்கிறோம். 30 சதவீதம் மீன் அதிகம் தேவைப்படுகிறது. அதனால், மீன்களை பதப்படுத்த வேண்டிய தேவையில்லை. பதப்படுத்த வேண்டிய அவசியம் மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இல்லை.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மீன்களைக் கொண்டு செல்ல முன்பெல்லாம் அவற்றை பதப்படுத்தாமல் ஐஸ் பெட்டியில் கொண்டு சென்றனர். இப்போது குளிர் வசதியுடன் கூடிய இன்சுலேட்டட் வேன் உள்ளது. இயற்கையாக பாதுகாக்கும் சூழ்நிலை உள்ளது. மீனவர்கள் இதனை ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை. மீனை விட சிறந்த உணவு ஏதுமில்லை. புரதச்சத்து உள்ளது, கண்ணுக்கு நல்லது. செலினியம் என்ற புரதம் உள்ளதால் புற்றுநோய், ஹார்ட் அட்டாக் ஆகியவற்றை தடுக்கும். குழந்தைகளுக்கும் நல்லது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை வதந்தியை பரப்பி பாழாக்க வேண்டாம் என்பது அரசின் கோரிக்கை.

பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் மீன் மாதிரிகளை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்யலாம். அப்படியும் சந்தேகம் இருந்தால் சோதனைக்குழாயில் மீன்களின் திசுக்களைச் செலுத்தி சோதிக்கலாம். அச்சம் தேவையில்லை. எல்லா விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை, உள்ளாட்சி துறை, மீன்வளப் பல்கலைக்கழகம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊடகங்களில் வெளிவந்த செய்தி வெளிமாநில மீன்களை வைத்து நடத்திய சோதனையாக இருக்கலாம். மற்ற மாநிலங்கள் குறித்து சொல்ல முடியாது. எந்த மாதிரி எங்கு எடுத்தது என்பது தெரியாது. சிந்தாதிரிப்பேட்டையிலும் ஆந்திர மீன்கள் விற்பனையாகின்றன. மீன்களில் ஃபார்மாலின் கலந்து மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்வார்களா? மற்ற மாநில மாதிரிகளில் இருந்தால் கண்பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசை கொண்ட ஒருசில சுயநலமிகளால் இத்தகைய குற்றச்சாட்டு எழலாம். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் மீன்களில் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close